தில்லியில் டெங்கு பாதிப்பு 8,000-ஐ கடந்தது!

தில்லியில் நிகழாண்டு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,000-ஐ கடந்துள்ளது. மலேரியாவுக்கு இதுவரை 1,106 பேரும், சிக்குன்குன்யாவுக்கு 855 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தில்லியில் நிகழாண்டு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,000-ஐ கடந்துள்ளது. மலேரியாவுக்கு இதுவரை 1,106 பேரும், சிக்குன்குன்யாவுக்கு 855 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தில்லியின் மூன்று மாநகராட்சிகள் சார்பில் தெற்கு தில்லி மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தில்லியில் கடந்த ஜனவரி மாதம் முதல் நவம்பர் 11-ஆம் தேதி வரை, மொத்தம் 8,063 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதில், 4,188 பேர் தில்லியைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ளோர், வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். டெங்கு காய்ச்சலுக்கு 12 வயது சிறுவன் உள்பட இதுவரை 4 பேர் பலியாகி உள்ளனர்.
இதேபோல, மலேரியாவால் இதுவரை 1,106 பேரும், சிக்குன்குன்யாவால் 855 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நகரில் இதுவரை சுமார் 2 லட்சம் வீடுகளில் கொசுப் பெருக்கம் கண்டறியப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தில்லியைப் பொருத்தவரை, டெங்கு,  சிக்குன்குன்யா உள்ளிட்ட நோய்களின் தாக்கம் வழக்கமாக ஜூன் மாத மத்தியில் தொடங்கி நவம்பர் வரை நீடிக்கும். ஆனால், நிகழாண்டில் ஜனவரி முதலே இந்நோய்களின் தாக்கம் தலைதூக்கிவிட்டது.
டெங்கு, சிக்குன்குன்யா நோய்கள், ஏடிஸ் ஏஜிப்டி வகை கொசுக்களால் பரவுகின்றன. இவ்வகை கொசுக்கள், நன்னீரில் வளரக் கூடியவையாகும்.
மலேரியாவை பரப்பும் அனாஃபிலஸ் வகை கொசுக்கள், நன்னீரில் மட்டுமன்றி கலங்கிய நீரிலும் வளரக் கூடியவை. எனவே, சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதன் மூலம் மேற்கண்ட நோய்களைத் தடுக்க முடியும். இதுதொடர்பாக துண்டு பிரசுரங்கள் உள்பட பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜனவரி 1 முதல் நவ.11 வரை
டெங்கு 8,063
மலேரியா 1,106
சிக்குன்குன்யா 855

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com