முதியோர் ஆணையத்தை அமைக்க வேண்டும்:  விஜேந்தர் குப்தா

தில்லியில் முதியோர் ஆணையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தில்லி அரசுக்கு சட்டப்பேரவை பாஜக உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான விஜேந்தர் குப்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

தில்லியில் முதியோர் ஆணையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தில்லி அரசுக்கு சட்டப்பேரவை பாஜக உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான விஜேந்தர் குப்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் புதன்கிழமை கூறியதாவது:  தில்லியில் வசிக்கும் முதியவர்களின் நலனுக்காக முதியோர் ஆணையம் அமைக்கப்படும் என  பட்ஜெட் கூட்டத் தொடரில் தில்லி அரசு அறிவித்தது. இந்த வாக்குறுதியை தில்லி அரசு மறந்துவிட்டதாகத் தோன்றுகிறது.  தில்லியில் சுமார் 20 லட்சம் முதியவர்கள் வசிக்கின்றனர். இது நாட்டில் மொத்தமுள்ள முதியோர்களின் எண்ணிக்கையில் 6.8 சதவீதமாகும்.  தில்லியில் வசிக்கும் முதியவர்களுக்கு  இலவச புனித யாத்திரை போன்ற திட்டத்தை கடந்து,  முதியோர் ஆணையத்தை அமைப்பது குறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் யோசிக்க வேண்டும்.
 இலவச புனித யாத்திரை திட்டத்தால் சில ஆயிரம் முதியவர்கள் மட்டுமே பயனடைவர். ஆனால், முதியோர் ஆணையம் அமைக்கப்பட்டால் அவர்களின் பாதுகாப்பு, நீண்டகால மகிழ்ச்சி ஆகியவற்றை உறுதி செய்ய முடியும்.  மேலும், முதியவர்களின் நலன் காக்கும் வகையில் அவர்களது குறைகளையும் போக்க முடியும். தற்போது வெறும் இலவச யாத்திரை திட்டத்தை மட்டுமே தில்லி அரசு அறிவித்துள்ளது. எனவே, தில்லியில் வசிக்கும் முதியோர்களைப் பாதுகாக்க முதியோர் ஆணையம் அமைக்கப்படுவது அவசியமாகும் என்றார் விஜேந்தர் குப்தா. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com