தில்லி மெட்ரோ சார்பில் "தான் உத்ஸவ்' வார விழா

தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆர்சி) சார்பில் "தான் உத்ஸவ்ட வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.  

தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆர்சி) சார்பில் "தான் உத்ஸவ்ட வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.  
இதுகுறித்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் புதன்கிழமை கூறியதாவது:  தில்லி மெட்ரோ சார்பில் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் அக்டோபர் 8-ஆம் தேதி வரை ஒரு வாரத்திற்கு  "தான் உத்ஸவ் 2017' கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, தில்லி மெட்ரோ ஒருங்கிணைப்பில் உள்ள விஷ்வவித்யாலயா,  ரோஹிணி மேற்கு,  துவாரகா செக்டார் 21,  நொய்டா சிட்டி சென்டர், சரிதா விஹார் (5-ஆம்தேதி),  வைஷாலி,  கஷ்மீரி கேட்,  சென்ட்ரல் செக்ரடேரியேட்,  ஹுடா சிட்டி சென்டர்,  ராஜீவ் சௌக் (6-ஆம் தேதி) ஆகிய ரயில் நிலையங்களில் எழுதுபொருள்கள்,  புத்தகங்கள் ஆகியவற்றை சேகரிக்க பிரத்யேக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த மையங்களில் இருக்கும் தன்னார்வலர்களிடம் புத்தகங்கள், எழுதுபொருள்களை பயணிகள் வழங்கிச் செல்லலாம்.  இதேபோன்று சேகரிப்பு முகாம்கள் டிஎம்ஆர்சியின் குடியிருப்புக் காலனிகளிலும் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
தில்லி மெட்ரோ அருங்காட்சியகத்தில் குழந்தைகளுக்கான பொம்மலாட்ட நிகழ்ச்சியும், உல்லாசப் பயணத்திற்கும் புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது.  சுமார் 70 குழந்தைகள் இந்த நிகழ்வில் பங்கேற்று பொம்மலாட்டத்தையும்,  அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டனர்.  
ஒவ்வொரு ஆண்டும் இந்த "தான் உத்ஸவ்' நிகழ்ச்சியை  தன்னார்வ நிறுவனங்களுடன் பெரு நிறுவனங்கள்,  அரசு அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தி வருவதாக டிஎம்ஆர்சி அதிகாரி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com