தில்லியில் சுற்றுலாப் பயணியிடம் கேமரா பறிப்பு:மூவர் சிக்கினர்

தில்லிக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பெண்ணிடம் கேமரா பறிக்கப்பட்ட சம்பவத்தில் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும், சிறுவன் ஒருவனை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தில்லிக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பெண்ணிடம் கேமரா பறிக்கப்பட்ட சம்பவத்தில் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும், சிறுவன் ஒருவனை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
பெலாரஸ் நாட்டைச் சேர்ந்தவர் வோல்ஹா தாமஸ் (32). இவர் தனது கணவருடன் இந்தியாவுக்கு சுற்றுலா வந்திருந்தார். இந்நிலையில், தில்லியில் உள்ள ஹுமாயுன் கல்லறையை பார்ப்பதற்காக சென்றிருந்தார். அங்கு இஸா கல்லறை அருகே புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது, சிறார் உள்பட  மூவர் அவரது கேமராவை பறித்துக் கொண்டு சுவர் ஏறிக் குதித்து தப்பினர். இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணி அளவில் நடந்துள்ளது.
இது குறித்து அவர் போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று சுமார் 50-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதன் பிறகு கேமராவை பறித்துச் சென்றவர்களை போலீஸார் அடையாளம் கண்டனர். இதைத் தொடர்ந்து,  அப்துல் சமத் (22), சல்மான் (21) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். சிறுவன் ஒருவனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் போலீஸார் துரிதமாக செயல்பட்டு கேமராவை பறித்தவர்களை கைது செய்துள்ளனர். தொழில் முறை புகைப்படக் கலைஞரான வோல்ஹா தாமஸ், தனது சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்ல வேண்டிய நேரத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com