கிழக்கு தில்லி மேயர் இல்லம் முன்பு துப்புரவுப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஊதிய நிலுவயை வழங்கக் கோரி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிழக்கு தில்லி மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள், மேயர் நீமா பகத்தின் இல்லம் முன்பாக வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊதிய நிலுவயை வழங்கக் கோரி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிழக்கு தில்லி மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள், மேயர் நீமா பகத்தின் இல்லம் முன்பாக வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மேயரின் உருவ பொம்மையை எரித்த அவர்கள், அவரது வீட்டு முன்பாக குப்பைகளையும் கொட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதுகுறித்து துப்புரவு பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் சஞ்சய் கெலாட் கூறியதாவது:
மத்திய அரசு முதல் மாநகராட்சிகள் வரை அனைத்துமே தூய்மை குறித்து பேசுகின்றன. ஆனால், அவை அனைத்துமே துப்புரவுப் பணியாளர்களான எங்களது பிரச்னைகளை புரிந்துகொண்டதே இல்லை. சுமார் 11,000 பேரை உறுப்பினர்களாகக் கொண்ட எங்களது சங்கத்தில் இருந்து பெரும்பாலானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் சில சங்கத்தைச் சேர்ந்தவர்களும் எங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் இணைய உள்ளனர். தீபாவளி பண்டிகை நேரத்தில் குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பது நல்லதல்ல என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், எங்களைப் பற்றியோ, எங்களது குடும்பத்தைப் பற்றியோ, ஊதிய நிலுவை குறித்தோ யாரும் கவலைப்படவில்லை. அதனால் எங்களுக்கு வேறு வழி கிடைக்கவில்லை.
ஊதிய நிலுவை, சுகாதாரச் செலவுகளுக்கான ஸ்மார்ட் கார்டு, ஓய்வூதியம் உள்ளிட்ட எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அதுவரை எங்கள் ஆர்ப்பாட்டம் தொடரும் என்று சஞ்சய் கெலாட் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com