தில்லி விமான நிலையத்தில் பயணியின் பையை திருடியவர் கைது

தில்லி விமான நிலையத்தில் பயணியின் பையைத் திருடியதாக விமான நிறுவன ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இது குறித்து தில்லி காவல் துறை துணை ஆணையர் (ஐஜிஐ ஏர்போர்ட்) சஞ்சய் பாஷியா

தில்லி விமான நிலையத்தில் பயணியின் பையைத் திருடியதாக விமான நிறுவன ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இது குறித்து தில்லி காவல் துறை துணை ஆணையர் (ஐஜிஐ ஏர்போர்ட்) சஞ்சய் பாஷியா கூறியதாவது:
தில்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியா எஸ்ஏடிஎஸ் நிறுவனத்தின் உதவி மேலாளர் (பாதுகாப்பு) சதீஷ் குமார் செப்டம்பர் 11-ஆம் தேதி காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.
அதில், சுங்கத் துறையின் அனுமதிக்காக வைக்கப்பட்டிருந்த பயணிகளின் 9 பைகளில் ஒன்று காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, சாமான்கள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆராயப்பட்டன. அப்போது, எஸ்ஏடிஎஸ் நிறுவன ஊழியர் கோஷ் (23) என்பவர் பையைத் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து, மகிபால்பூரில் உள்ள அவரது இருப்பிடத்தில் வைத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, தான் செய்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து திருட்டுப் பையும் மீட்கப்பட்டது. தவிர, மேலும் ஒரு பை அவரது வீட்டில் இருந்ததும் கண்டறியப்பட்டது. அப்போது, ஏற்கெனவே இதுபோன்று திருட்டில் அவர் ஈடுபட்டதாகவும் கூறினார். இதையடுத்து, அந்தப் பையும் மீட்கப்பட்டதாக போலீஸ் அதிகாரி சஞ்சய் பாஷியா தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com