மக்களுக்கு அர்ப்பணிப்போடு பணியாற்றுங்கள்: இளம் அதிகாரிகளுக்கு மணீஷ் சிசோடியா அறிவுரை

பொதுமக்களுக்கு அக்கறையுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்றுங்கள் என்று இளம் குடிமைப் பணி அதிகாரிகளுக்கு தில்லி துணை முதல்வர் மனீஷ்சிசோடியா அறிவுறுத்தினார்.

பொதுமக்களுக்கு அக்கறையுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்றுங்கள் என்று இளம் குடிமைப் பணி அதிகாரிகளுக்கு தில்லி துணை முதல்வர் மனீஷ்சிசோடியா அறிவுறுத்தினார்.
தில்லி தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மிúஸாரம் மாநிலப் பிரிவு குடிமைப் பணி அதிகாரிகள் (பயிற்சி) வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினர்.
அப்போது, மணீஷ் சிசோடியா, 'நீங்கள் எங்கு பணி அமர்த்தப்படுகிறீர்களோ அங்கு பொதுமக்களுக்கு சிறப்பான சேவையை அளிக்க வேண்டும்.
அர்ப்பணிப்பு உணர்வுடனும், அக்கறையுடனும் பணியாற்ற வேண்டும். அரசுப் பணியின் போது பொதுமக்களின் குறைகளையும், துயரங்களையும் தீர்க்க பாடுபட வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.
மிúஸாரம் குடிமைப் பணிகள் பயிற்சி பெறும் இளம் அதிகாரிகள் பயிற்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக துணை முதல்வர், அதிகாரிகளைச் சந்திக்கும் நிகழ்வு நடைபெற்றதாகவும், யூனியன் பிரதேச குடிமைப் பணிகள் (யுடிசிஎஸ்) இயக்ககத்தால் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தில்லி அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com