தில்லி தமிழ்ச்சங்கத்தில் சிறப்புக் கவியரங்கம்

தில்லி தமிழ்ச் சங்கத்தில் 'என்னினும் எவ்வகை உயர்ந்தோர் நீவிர்' எனும் தலைப்பில் சிறப்புக் கவியரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது

தில்லி தமிழ்ச் சங்கத்தில் 'என்னினும் எவ்வகை உயர்ந்தோர் நீவிர்' எனும் தலைப்பில் சிறப்புக் கவியரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசின் முதல் கம்பன் விருதாளர் முனைவர் பால. ரமணி தலைமையில் நடைபெற்ற இக்கவியரங்கத்தில் 'கல்வி' என்ற தலைப்பில் கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி, 'செல்வம்' என்ற தலைப்பில் கவிஞர் தெய்வசிகாமணி, 'ஒழுக்கம்' என்ற தலைப்பில் கவிதாயினி ஜோதி பெருமாள், 'மனித நேயம்' என்ற தலைப்பில் கவிஞர் வெ. முரளிதரன், 'உழைப்பு' எனும் தலைப்பில் கவிஞர் கோவி. குப்புசாமி, 'நேர்மை' என்ற தலைப்பில் கவிஞர் தமிழடிமை நடராஜன் ஆகியோர் கவிதை வாசித்தனர்.
இக்கவிஞர்களை தில்லி தமிழ்ச் சங்கத்தின் தலைவர் இந்துபாலா, பொதுச் செயலாளர் இரா. முகுந்தன், இணைச் செயலாளர்கள் பாலமூர்த்தி, ரமாமணி சுந்தர், இணைப் பொருளாளர் கே. கணேசன், செயற்குழு உறுப்பினர்கள் எம். ஆறுமுகம், எஸ். மகேந்திரன், பி. சங்கர், காத்திருப்பு உறுப்பினர் அருணாசலம் ஆகியோர் கெளரவித்தனர் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com