நகைகள் கொள்ளைச் சம்பவம்: பிகாரில் இளைஞர் கைது

தில்லியில் நகைக் கடை அதிபரின் வீட்டில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவத்தில் முக்கிய மூளையாகச் செயல்பட்ட நபரை பிகார் மாநிலம், மதுபனியில் கைது செய்துள்ளதாக தில்லி காவல் துறையினர்

தில்லியில் நகைக் கடை அதிபரின் வீட்டில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவத்தில் முக்கிய மூளையாகச் செயல்பட்ட நபரை பிகார் மாநிலம், மதுபனியில் கைது செய்துள்ளதாக தில்லி காவல் துறையினர் தெரிவித்தனர்.
இது குறித்து தில்லி காவல் துறையினர் கூறியதாவது:
தில்லி ரோஹிணி பகுதியைச் சேர்ந்த நகைக் கடைக்காரர் வீட்டில் கடந்த மே 3-ஆம் தேதி சிலர் அத்துமீறி புகுந்தனர். நகைக் கடைக்காரர் மனைவி வீணா மச்சந்தாவைக் கட்டிப்போட்டுவிட்டு ரூ.13 லட்சம் மதிப்பிலான பணம், நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
விசாரணையில் மச்சந்தா வீட்டில் உதவியாளராக வேலை செய்த பிரதீப் யாதவ் தனது கூட்டாளிகள் ரஞ்ஜீத், சூரஜ், உமேஷ், சஞ்சய் மற்றும் சிறாருடன் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
மேலும், இக்கொள்ளைச் சம்பவத்தில் பிரதீப் யாதவ் முக்கிய மூளையாக செயல்பட்டதும் தெரிய வந்தது.
இதையடுத்து, பிரதீப் யாதவைக் கைது செய்ய துப்புக் கொடுப்போருக்கு ரூ.75 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என காவல் துறையின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இக்கொள்ளையில் ஈடுபட்ட ஐந்து பேரை போலீஸார் கைது செய்தனர். பிரதீப் யாதவ் தப்பிவிட்டார்.
அவரைக் கைது செய்ய நடவடிக்கைகள் எடுகப்பட்டு வந்த நிலையில், பிகார் மாநிலம், மதுபனி பேருந்து நிலையம் பகுதி அருகே பிரதீப் யாதவ் வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தில்லி காவல் துறையினர் அவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com