பைக் மீது லாரி மோதல்: 2 மருத்துவர்கள் பலி

தில்லி பவானா பகுதியில் 'பைக்' மீது லாரி மோதிய சம்பவத்தில் மகரிஷி வால்மிகி அரசு மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி உள்பட இரு மருத்துவர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீஸார்

தில்லி பவானா பகுதியில் 'பைக்' மீது லாரி மோதிய சம்பவத்தில் மகரிஷி வால்மிகி அரசு மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி உள்பட இரு மருத்துவர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து ரோஹிணி மாவட்டக் காவல் துறை அதிகாரி கூறியதாவது: மத்திய பிரதேச மாநிலம், குவாலியரை பூர்விமாகக் கொண்டவர் டாக்டர் ராஜேஷ் ராஜ்புத். இவர் தில்லி மகரிஷி வால்மிகி அரசு மருத்துவமனையில் மருத்துவ அதிகாரியாக கடந்த நான்கு ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். இதே மருத்துவமனையில் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த குர்ஃபான் ஆலம் என்பவர் இளநிலை மருத்துவராகப் பணியாற்றி வந்தார். இவர் யுபிஎஸ்சி தேர்வுக்கும் தயாராகி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சம்பவத்தன்று இரவு சுமார் 9 மணியளவில் மருத்துவமனையின் விடுதியில் இருந்து மருத்துவர்கள் இருவரும் உணவு அருந்துவதற்காக வெளியே சென்றனர். அதன் பின்னர், உணவருந்திவிட்டு விடுதிக்கு இரு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். பவானா தொழிற்சாலைப் பகுதியில் லாரி மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். லாரியின் ஓட்டுநர் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடிவிட்டார்.
இது குறித்து போலீஸாருக்கு வழிப்போக்கர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். ஆனால், மகிரிஷி வால்மிகி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், வரும் வழியிலியே குர்ஃபான் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பலத்த காயத்துடன் இருந்த டாக்டர் ராஜ்புத் மேல்சிகிச்ûக்காக மாக்ஸ் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார். ஆனால், அங்கு சிகிச்சையின் போது ராஜ்புத் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் லாரி மோதியதால்தான் இருவரும் உயிரிழந்தார்களா? அல்லது வேறு ஏதும் காரணமாக என்பது குறித்து பவானா காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com