அக்.2-இல் தூய்மைப் பணியில் ஈடுபடஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் திட்டம்

காந்தி ஜெயந்தி நாளில் பாஜக கவுன்சிலர்களின் வார்டுகளில் தூய்மைப் பணி மேற்கொள்ள ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் திட்டமிட்டுள்ளனர். இது குறித்து கட்சியின் மூத்த தலைவர் சனிக்கிழமை கூறியதாவது:

காந்தி ஜெயந்தி நாளில் பாஜக கவுன்சிலர்களின் வார்டுகளில் தூய்மைப் பணி மேற்கொள்ள ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் திட்டமிட்டுள்ளனர். இது குறித்து கட்சியின் மூத்த தலைவர் சனிக்கிழமை கூறியதாவது:
தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். திட்டத்தின் தொடக்கத்தில் பாஜக தலைவர்களும், மாநகராட்சி கவுன்சிலர்களும் தெருக்களை தூய்மை செய்வதைப் போல புகைப்படங்கள் வெளியிடப்பட்டனர். ஆனால், அதற்கு பிறகு தூய்மை, துப்புரவுப் பணிகள் பெயரளவுக்குக்கூட மேற்கொள்ளப்படவில்லை.
குறிப்பாக, தில்லி மாநகராட்சித் தேர்தலின் போது தூய்மை, துப்புரவுப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்தது.
மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் வாக்குறுதியை பாஜக மறந்துவிட்டது.
தற்போது தில்லி மாநகராட்சிகளுக்கு உள்பட்ட வார்டுகள் அமைந்துள்ள பகுதிகளில் துப்புரவுப் பணிகள் சரிவர மேற்கொள்ளப்படாமல் உள்ளன. தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கிய கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் வசிக்கும் பகுதிகளில் சுகாதார சீர்கேடுகள் நிலவுகின்றன.
இந்நிலையில், தூய்மையின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தூய்மைப் பணியை மேற்கொள்வது மாநகராட்சிகளின் கடமை என்பதை பாஜக கவுன்சிலர்களுக்கு உணர்த்தும் வகையில், காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் 2-ஆம் தேதி, தத்தமது சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தில்லி மாநகராட்சிகளில் பாஜக கவுன்சிலர்களின் வார்டுகளில் ஆம் ஆத்மி எம்எம்ஏக்களுடன் சேர்ந்து ஆம் ஆத்மி கட்சியினர் துப்பரவுப் பணிகளை மேற்கொள்வார்கள் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com