அஸ்ஸாம் செல்லும் ரயில்களின் சேவை மீண்டும் தொடக்கம்

அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த மாதம் பெய்த தொடர் மழை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த மாதம் பெய்த தொடர் மழை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ரயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கின. சில பகுதிகளில் ரயில் தண்டவாளங்கள் முற்றிலுமாக மூழ்கும் நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்துக்கு ரயில்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்களுக்குச் செல்லும் ரயில்கள் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டதாக வடக்கு ரயில்வே ஆகஸ்ட். 28-ஆம் தேதி அறிவித்தது.
இதன்படி, அஸ்ஸாம் செல்லும் திப்ருகர் ராஜ்தானி (12236), திப்ரூகர் டவுன் ராஜ்தானி (12424), திப்ரூகர் டவுன் ராஜ்தானி (12436), புது தில்லி - குவாஹட்டி (12502), ஆனந்த் விஹார் - குவாஹட்டி (12506), நியூ ஜல்பாய்குரி (12524), ஆனந்த் விஹார் - அகர்தலா (14020), தில்லி - திப்ரூகர் (14056), புது தில்லி - சில்ச்சர் (15602), ஆனந்த் விஹார் - கமாக்யா (15622), புது தில்லி - நாகர்லகுன் உள்ளிட்ட 12 ரயில்கள் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
மீண்டும் சேவை: இந்நிலையில், அஸ்ஸாம் மாநிலத்தில் வெள்ள நிலவரம் சீரடைந்தையொட்டியும், நவராத்திரி, துர்கா பூஜை உள்ளிட்ட பண்டிகை காலம் தொடங்கியுள்ளதைக் கருத்தில் கொண்டும் அஸ்ஸாம் செல்லும் ரயில்களின் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து வடக்கு ரயில்வே உயர் அதிகாரி சனிக்கிழமை கூறுகையில், 'வெள்ளிக்கிழமை செல்லும் அவத் எக்ஸ்பிரஸ் (15909/15910) ரயில் மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. இதுபோல, புது தில்லி - குவாஹட்டி (12502) ரயில் சேவை செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் இயக்கப்படும். புது தில்லி - சில்ச்சர் (15602) ரயில் செப்டம்பர் 28-ஆம் தேதி தொடங்கி இயக்கப்படும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com