31-ஆவது பூங்கா சுற்றுலா விழா நாளை தொடக்கம்

தில்லி சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் சாகேத்தை அடுத்துள்ள "கார்டன் ஆஃப் பைவ் சென்ஸல்' 31-ஆவது தோட்ட சுற்றுலா விழாவை துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 16) தொடங்கி வைக்கிறார்.

தில்லி சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் சாகேத்தை அடுத்துள்ள "கார்டன் ஆஃப் பைவ் சென்ஸல்' 31-ஆவது தோட்ட சுற்றுலா விழாவை துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 16) தொடங்கி வைக்கிறார்.
இது குறித்து தில்லி சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் உயரதிகாரி புதன்கிழமை கூறியதாவது:
தூய்மையான, பசுமையான மாநகரம் என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையிலும், வசந்தகாலத்தை வரவேற்கவும் தில்லியில் கடந்த 30 ஆண்டுகளாக தோட்ட சுற்றுலா விழா நடைபெற்று வருகிறது. 
நிகழாண்டு விழாவுக்கு "தோட்டம் வளர்ப்போம், தில்லி காப்போம்' என பெயரிடப்பட்டுள்ளது. தோட்டப் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வையும், தோட்ட வேலைகளால் நாள்தோறும் ஏற்படும் உடல், சுற்றுச்சூழல் பயன்களையும் எடுத்துரைக்கும் வகையில் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
பிப்ரவரி 19-ஆம் தேதி வரை மூன்று நாள் நடைபெறும் இந்தத் தோட்ட சுற்றுலா விழாவில் பல்வகை மலர்க் கண்காட்சிக்கும், தோட்டக் கலைக் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவற்றுடன், சூஃபி, கிராமிய இசை நிகழ்ச்சிகள், குழந்தைகளை மகிழ்விக்க மேஜிக் ஷோ, ஓவியம் வரைதல் போட்டி ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 
இந்த விழாவில் புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி), கிழக்கு தில்லி மாநகராட்சி, தில்லி ஜல் போர்டு, தில்லி வளர்ச்சி ஆணையம், கிழக்கு தில்லி மாநகராட்சி, வடக்கு ரயில்வே, மானவ் ரச்சமான பல்கலைக்கழகம் உள்ளிட்டவை பங்கேற்கவுள்ளன.
 காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த தோட்டச் சுற்றுலா விழாவுக்கு வந்து செல்வோரின் வசதிக்காக சாகேட் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து இலவச வாகன (ஷட்டல்) வசதி செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com