சீலிங் நடவடிக்கையைக் கண்டித்து சிஏஐடி நூதன போராட்டம்

தில்லி மாநகராட்சிகள் மேற்கொண்டு வரும் சீலிங் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அகில இந்திய வர்த்தகர் சங்கங்களின் கூட்டமைப்பு

தில்லி மாநகராட்சிகள் மேற்கொண்டு வரும் சீலிங் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அகில இந்திய வர்த்தகர் சங்கங்களின் கூட்டமைப்பு (சிஏஐடி) சார்பில் ரோஜா மலர்களை ஏந்தி நூதன போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 சீலிங் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி தொடங்கி 48 மணி நேரம் கடையடைப்பும், 3-ஆம் தேதி கண்டாகர் சாந்தினி செளக் வரை வணிகர்கள் பங்கேற்ற பேரணியும் நடைபெற்றன. 
மேலும், தில்லி மாநகராட்சிகள் மேற்கொண்டு வரும் சீலிங் நடவடிக்கையை நிறுத்துவதற்கு மத்திய அரசு அவசர சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என கடந்த 9-ஆம் தேதி கோரிக்கை விடுத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு கூட்டமைப்பின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் பிரவீண் கண்டெல்வால் செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியிருந்தார்.
நூதன போராட்டம்: இந்நிலையில், பிரவீண் கண்டெல்வால் தலைமையிலான கூட்டமைப்பினர் வடக்கு, தெற்கு தில்லி மாநகராட்சிகளின் தலைமையகம் அமைந்துள்ள சிவிக் சென்டர் அருகே கையில் ரோஜா மலர்களை ஏந்தி புதன்கிழமை நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து பிரவீண் கண்டெல்வால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
தில்லியில் மாநகராட்சிகள் மேற்கொண்டு வரும் சீலிங் நடவடிக்கைகளால் வணிகர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்பாதிப்புகளிலிருந்து வணிகத்தையும், வணிகர்களையும் மீட்க வேண்டும். எனவே, சீலிங் நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும். சீலிங் நடவடிக்கைக்கு எதிராக "மை வேலன்டைன் - மை ஷாப்' என்பதை வலியுறுத்தி ரோஜா மலர்கள் ஏந்தி நூதான போராட்டம் நடத்தினோம். கண்டாகர் பகுதியில் வியாழக்கிழமை (பிப்ரவரி 15) வணிகர்களின் மாபெரும் பேரணி நடைபெறும் என்றார் அவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com