தேசத்தின் தாயாக பசுவை அறிவிக்கக்கோரி பேரணி

பசுவை தேசத்தின் தாயாக அறிவிக்கக் கோரி தில்லி ராம் லீலா மைதானத்தில் பிப்ரவரி 18-ம் தேதி பேரணி நடைபெறுகிறது. 

பசுவை தேசத்தின் தாயாக அறிவிக்கக் கோரி தில்லி ராம் லீலா மைதானத்தில் பிப்ரவரி 18-ம் தேதி பேரணி நடைபெறுகிறது. 
இதுதொடர்பாக ஆன்மிக குரு கோபால் மணி செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
பசுவை தாயாக பாவிக்காமல் விலங்காக பாவிக்கும் வரை, அதை வதை செய்வதை நாடு முழுவதும் தடுக்க முடியாது. ஆகையால், பசுவை தேசத்தின் தாயாக அறிவிக்கக் கோரி தில்லி ராம்லீலா மைதானத்தில் பிப்ரவரி 18-ம் தேதி பேரணி நடத்தப்படும். இந்தப் பேரணிக்கான ஏற்பாடுகளை பாரதிய கவ் கிராந்தி மஞ்ச் செய்து வருகிறது. 
இதில், அரசியல் கட்சித் தலைவர்களை பங்கேற்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பசுப் பாதுகாப்புக்காக தனி அமைச்சகம் அமைக்க வேண்டும், பசுவின் சாணத்தை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்,  வயதான பசுக்களுக்கு மறுசீரமைப்பு திட்டம் வகுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் இந்தப் பேரணியின்போது முன்வைக்கப்படும்.
17 கோடி பசுக்களின் சாணத்தை வைத்து நாட்டின் எரிவாயு தேவை, எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தப் பேரணிக்கு பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தப் பேரணிக்கு பிறகு, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த திட்டமிட்டுள்ளோம்' என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com