தில்லி அரசு ஊழியர்கள் மௌனப் போராட்டம்

தில்லி தலைமைச் செயலர் அன்ஷு பிராகஷ் தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தில்லி அரசு ஊழியர்கள் வியாழக்கிழமை 5 நிமிடம் மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தில்லி தலைமைச் செயலர் அன்ஷு பிராகஷ் தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தில்லி அரசு ஊழியர்கள் வியாழக்கிழமை 5 நிமிடம் மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தில்லி அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பும், கண்ணியமும் உறுதிப்படுத்தப்படும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என்று ஐஏஎஸ் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஐஏஎஸ் சங்கத்தின் செயலாளர் மணிஷா சக்சேனா கூறுகையில், "தில்லி அரசு அலுவலகங்கள், ஜல் போர்ட் ஆகியவற்றில் பணியாற்றும் அரசு ஐஏஎஸ், டானிக்ஸ் அதிகாரிகள், டாஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் தினந்தோறும் மதிய உணவு இடைவேளையில் தங்கள் அலுவலகங்களுக்கு வெளியே, 1.30 மணிக்கு 5 நிமிடம் மௌனம் கடைப்பிடப்பார்கள்.
தில்லி அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பும், கண்ணியமும் அளிப்பது உறுதி செய்யப்படும் வரை தினந்தோறும் இந்த மௌனப் போராட்டம் தொடரும்' என்றார்.
தில்லி தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மௌன போராட்டத்துக்கு தில்லி உள்துறைச் செயலர் மனோஜ் பாரிடா தலைமை தாங்கினார். ன
இதபோல், தில்லி அரசின் வருவாயத் துறை, போக்குவரத்து, தில்லி நகர்ப்புற வளர்ச்சி வாரியம், டிடிசி ஆகிய துறைகளின் அதிகாரிகளும் அவரவர் அலுவலகங்களுக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com