ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் இருவரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

தில்லி அரசின் தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாஷ் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள

தில்லி அரசின் தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாஷ் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அமானதுல்லா கான், பிரகாஷ் ஜர்வால் ஆகிய இருவரின் ஜாமீன் மனுக்களை தில்லி பெருநகர நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
முதல்வர் கேஜரிவால் இல்லத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் தான் தாக்கப்பட்டதாக தில்லி அரசின் தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். முதல்வர் கேஜரிவால் முன்னிலையில் அன்ஷு பிரகாஷ் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக தியோலி தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ ஜர்வால் செவ்வாய்க்கிழமையும், ஓக்லா தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானதுல்லா கான் புதன்கிழமையும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இருவரையும் போலீல் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி காவல் துறை தாக்கல் செய்த மனுவை பெருநகர நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது. மேலும், இருவரையும் திகார் சிறையில் ஒரு நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டிருந்தது. 
இது தொடர்பான வழக்கு பெருநகர நீதிமன்ற நீதிபதி ஷெஃபாலி பர்னா தாண்டன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு எம்எல்ஏக்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று நீதிபதி தெரிவித்தார். முன்னதாக இரு எம்எல்ஏக்களையும் 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி வியாழக்கிழமை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com