சண்முகானந்தா சங்கீத சபா சார்பில் தில்லியில் தியாகராஜர் இசை விழா: இன்று தொடக்கம்

சண்முகானந்தா சங்கீத சபாவும், ஆந்திர மாநில அரசு இணைந்து தில்லியில் தியாகாராஜர் இசை விழாவை சனி, ஞாயிறு (பிப்ரவரி 24, 25) ஆகிய இரு தினங்கள் நடத்துகின்றன.

சண்முகானந்தா சங்கீத சபாவும், ஆந்திர மாநில அரசு இணைந்து தில்லியில் தியாகாராஜர் இசை விழாவை சனி, ஞாயிறு (பிப்ரவரி 24, 25) ஆகிய இரு தினங்கள் நடத்துகின்றன.
இந்த விழா தில்லி அசோகா சாலையில் உள்ள ஆந்திர பவனில் டாக்டர் அம்பேத்கர் கலையரங்கத்தில் நடைபெறுகிறது. முதல் நாளான சனிக்கிழமை மாலை 5 மணியளவில் மங்கள இசையுடன் விழா தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து தியாகராஜரின் திருவுருவப்படம் திறந்து வைக்கப்படும். 
பின்னர் மாலை 5.15 மணியளவில் சிக்கில் சி.குருசரணின் வாய்ப்பாட்டு இசை இடம் பெறும். இதில் ஆர்.கே. ஸ்ரீராம்குமார் (வயலின்), கே.வி. பிரசாத் (மிருதங்கம்) ஆகியோர் பக்கம் வாத்தியம் வாசிக்கின்றனர்.
நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் வாணி ரமா மூர்த்தியின் வாய்ப்பாட்டு இசை நடைபெறும். இதில் ஜி.ராகவேந்திர பிரசாத் (வயலின்), கும்பகோணம் எம்.பத்மநாபன் (மிருதங்கம்) ஆகியோர் பக்கவாத்தியம் வாசிக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து, மாலை 4.45 மணியளவில் இசைக் கலைஞர்கள் ஆர்.கே. ஆர்.கே. ஸ்ரீராம்குமார், கே.வி. பிரசாத் ஆகியோருக்கு "நாத கலாநிதி' விருது வழங்கும் நிகழ்வு இடம் பெறும். பின்னர் மாலை 5.45 மணியளவில் பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத்தின் வாய்ப்பாட்டு இசை இடம் பெறுகிறது. இதில் எல்.ராமகிருஷ்ணன் (வயலின்), சாய் கிரிதர் (மிருதங்கம்), எஸ்.சுனில்குமார் (கஞ்சிரா) ஆகியோர் பக்க வாத்தியம் வாசிக்கின்றனர். அனுமதி இலவசம்.
விழாவுக்கான ஏற்பாடுகளை சண்முகானந்தா சங்கீத சபாவும், ஆந்திர பவன் நிர்வாகிகளும் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com