தனியார் நிறுவனத்தின் தலைவரைப்போல் கேஜரிவால் செயல்படுகிறார்: பாஜக குற்றச்சாட்டு

தனியார் நிறுவனத்தின் தலைவரைப்போல், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறார் என்று தில்லி பாஜக குற்றம்சாட்டியது.

தனியார் நிறுவனத்தின் தலைவரைப்போல், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறார் என்று தில்லி பாஜக குற்றம்சாட்டியது.
நீதிபதி லோயா மர்ம மரணம் தொடர்பாக பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு எதிராக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியதையடுத்து, பாஜக இவ்வாறு சாடியது.
இதுதொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பாத்ரா செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:
உலகிலேயே பெரிய கட்சியான பாரதிய ஜனதாவின் தலைவராக அமித் ஷா ஜனநாயக ரீதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால், அரவிந்த் கேஜரிவால் சர்வாதிகாரியைப்போல் செயல்படுகிறார். தனியார் நிறுவனத்தின் தலைவர் தேர்வு செய்யப்படுவதைப்போல், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜரிவால் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரின் செயல்பாடுகளும் தனியார் நிறுவனத்தின் தலைவரைப்போல் உள்ளது.
தில்லியின் முன்னாள் அமைச்சர் ஜீதேந்தர் சிங் தோமர் மீது போலி சட்டச் சான்றிதழ் பெற்றதாக புகார் உள்ளது. அதேபோல் கேஜரிவாலின் முன்னாள் முதன்மைச் செயலர் ராஜேந்தர் குமார் மீது சிபிஐ ஊழல் வழக்குத் தொடுத்துள்ளது. இந்த இருவருக்கும் கேஜரிவால் பாதுகாப்பாக உள்ளார். ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி பேசிய தில்லி தலைமைச் செயலர் அன்ஷு பிராகஷ் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. தில்லியில் சட்டப்பாதுகாப்பு இல்லாத சூழலை ஏற்படுத்த கேஜரிவால் முயற்சிக்கிறார் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com