வீட்டுப் பணிப் பெண்ணாக இருந்த சிறுமி மீது கொடூரத் தாக்குதல்: பெண் டாக்டர் கைது

வடக்கு தில்லி, மாடல் டவுன் பகுதியில் வீட்டுப்பணிப் பெண்ணாக வேலை பார்த்து வந்த 14 வயது சிறுமியை வீட்டின் உரிமையாளரான

வடக்கு தில்லி, மாடல் டவுன் பகுதியில் வீட்டுப்பணிப் பெண்ணாக வேலை பார்த்து வந்த 14 வயது சிறுமியை வீட்டின் உரிமையாளரான பெண்டாக்டர் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இது தொடர்பாக அந்த டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
இது குறித்து கூறப்படுவதாவது: ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி, மாடல் டவுனில் வசித்து வரும் பெண்டாக்டர் வீட்டில் பணிப் பெண்ணாக வேலைக்குச் சேர்ந்தார்.
இந்நிலையில், அச்சிறுமியை அவ்வப்போது வீட்டு உரிமையாளரான பெண் டாக்டர் கத்திரிக்கோôல் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளார். மேலும், தீக்காயப்படுத்தி, கொடூரமான வகையில் அடித்து உதைத்துள்ளார். இது தொடர்பாக தில்லி மகளிர் ஆணையம் அளித்த தகவலின் அடிப்படையில் போலீஸார் சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அச்சிறுமி மீட்கப்பட்டு குழந்தைகள் நல வாரியத்தின் பரிந்துரையின் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, வீட்டு உரிமையாளரான அந்தப் பெண் டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று போலீஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக தில்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:
"சில தினங்களுக்கு முன் டிசிடபிள்யூ ஹெல்ப்லைன் எண் "181' -க்கு அழைப்பு வந்தது. அதில் பேசியவர், மாடல் டவுனில் ஒரு வீட்டில் பெண் டாக்டர் ஒருவர் வீட்டில் வேலை பார்க்கும் சிறுமியை கொடூரமாகத் தாக்கி சித்ரவதை செய்து வருவதாகத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, போலீஸாரின் உதவியுடன் அந்தப் 14 வயது சிறுமி மீட்கப்பட்டார்.
அந்த வீட்டின் உரிமையாளரான பெண் டாக்டர், அச்சிறுமியை கொடூரமாகத் தாக்கி சித்திரவதை செய்துள்ளது தெரிய வந்தது. அச்சிறுமிக்கு சரியான முறையில் உணவு வழங்காமல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அச்சிறுமி மிகவும் தைரியமாக அந்த டாக்டரை எதிர்கொண்டுள்ளார். அந்த வீட்டிலிருந்து வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைபார்த்து வந்த அச்சிறுமியை மீட்டோம். அந்த பெண் டாக்டரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்' என்று ஸ்வாதி மாலிவால் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com