பொதுக் கழிப்பிடங்களில் சுகாதாரம் பராமரிக்கப்படும்: தெற்கு தில்லி மேயர்

தெற்கு தில்லி மாநகராட்சிக்கு சொந்தமான பொதுக் கழிப்பிடங்களில் சுகாதாரம் தொடர்ந்து பராமரிக்கப்படும் என அம் மாநகராட்சியின் மேயர்

தெற்கு தில்லி மாநகராட்சிக்கு சொந்தமான பொதுக் கழிப்பிடங்களில் சுகாதாரம் தொடர்ந்து பராமரிக்கப்படும் என அம் மாநகராட்சியின் மேயர் கமல்ஜீத் ஷெராவத் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். தெற்கு தில்லி மாநகராட்சிக் கழிப்பிடங்களில் சுகாதார சீர்கேடு நிலவுவதாகப் எழுந்துள்ள புகாரைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  "தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் தெற்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 312 புதிய கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை மாநகராட்சியால் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட செயலி மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கழிப்பிடங்கள் தொடர்பாக குறைகள் இருந்தால் இச் செயலியில் மக்கள் குறைகளைப் பதிவு செய்யும் வசதி உள்ளது. 
கழிப்பிடங்களைப் பராமரிக்க போதுமான துப்புரவுத் தொழிலாளர்களை நியமித்துள்ளோம்.  
தங்களது பகுதி பொதுக் கழிப்பிடங்களில் ஏதும் சுகாதாரக் குறைபாடுகள் இருந்தால் அப் பகுதிக்கு பொறுப்பான மாநகராட்சி கழிவகற்றும் ஊழியர்களை தொடர்பு கொண்டு மக்கள் முறையிடலாம். கழிவகற்றும் ஊழியர்களின் தொலைபேசி எண்கள் செயலியில் இணைக்கப்பட்டுள்ளன. தெற்கு தில்லி மாநகராட்சி கழிப்பிடங்களில் சுகாதார சீர்கேடு நிலவுவதாக எழும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படை  ஆதாரமற்றவை. இக் கழிப்பிடங்களில் சுகாதாரம் தொடர்ந்து பராமரிக்கப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com