ஆம் ஆத்மி மீது போலீஸில் பாஜக புகார்

தில்லியில் மதக் கலவரங்களை ஏற்படுத்த ஆம் ஆத்மி கட்சி முயல்வதாக தில்லி நாடாளுமன்றச்சாலை காவல் நிலைய துணை ஆணையர் மது வர்மாவிடம் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் மதக் கலவரங்களை ஏற்படுத்த ஆம் ஆத்மி கட்சி முயல்வதாக தில்லி நாடாளுமன்றச்சாலை காவல் நிலைய துணை ஆணையர் மது வர்மாவிடம் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகார் மனுவை தில்லி பாஜகவின் நல்லாட்சிப் பிரிவின் தலைவர் சைலேந்தர் சிங், தில்லி பாஜக பொதுச் செயலர் குல்ஜீத் சிங் சாகல் உள்ளிட்டோர் அளித்தனர். இது தொடர்பாக சைலேந்தர்சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த மார்ச் 25-ஆம் தேதி ராமநவமி தினத்தன்று முல்ஸிம்களின் வழிபாட்டுத் தலத்திற்கு முன்னால் இந்துக்களைப் போல வேஷமிட்டிருந்த சிலர், வாள்களைச் சுழற்றியவாறு முஸ்லிம்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். அவர்கள் ஆம் ஆத்மிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் அப்பகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ அஹமதுல்லா கானின் வழிகாட்டுதலின்படியே அதைச் செய்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதன்மூலம் இந்து - முஸ்லிம் கலவரங்களை உருவாக்கி அதன் பழியை பாஜக மீது போடுவதுதான் ஆம் ஆத்மி கட்சியின் திட்டமாகும். இது முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் உத்தரவுப்படி நடந்ததாகவே சந்தேகிக்கிறோம். 
மேலும், இந்துக்களின் மனங்களைப் புண்படுத்தும் வகையில் ராமநவமிக்கு எதிரான தீர்மானத்தை தில்லி சட்டப்பேரவையில் அஹமதுல்லா கான் கொண்டுவர முயற்சித்தார். இதுபோன்ற செயல்கள், இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும். இதைத் தடுத்து நிறுத்தும் வகையில் தில்லி நாடாளுமன்றச்சாலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com