செந்தமிழ்ப் பேரவை சார்பில் சித்திரைத் திருவிழா

மயூர் விஹார் ஃபேஸ் 3-இல் செந்தமிழ்ப் பேரவை சார்பில் சித்திரைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

மயூர் விஹார் ஃபேஸ் 3-இல் செந்தமிழ்ப் பேரவை சார்பில் சித்திரைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு செந்தமிழ்ப் பேரவைச் செயலர் ஏ.மாரி தலைமை வகித்தார். காலையில் குழந்தைகள், பெண்களுக்கான ஓட்டப் பந்தயம், பாக்கெட் பால் போட்டி, கோலப் போட்டி, அதிர்ஷ்ட வட்டம் போட்டிகள், ஆண்களுக்கான உரியடித்தல் போட்டி ஆகியவை நடைபெற்றன. 
மாலையில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை தமிழ் வகுப்பு ஆசிரியை ஏ.கே. முத்துலட்சுமி தொடங்கிவைத்தார். இதில் நடனம், பாடல், மாறுவேடம், நாடகம் ஆகிய பிரிவுகளில் பலர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். குறிப்பாக கோலாட்டம், கும்மி, கரகம், குழு நடனம் போன்றவை பார்வையாளர்களைக் கவரும் வகையில் இருந்தது. அதைத் தொடர்ந்து, நவீன் பங்கேற்ற பலகுரல் நிகழ்ச்சி நடைபெற்றது. 
இவ்விழாவில் தில்லி காவல் துறை இணை ஆணையர் கண்ணன் ஜெகதீசன் முதன்மை விருந்தினராகப் பங்கேற்றார். மத்திய நிதி அமைச்சகத்தின் கலால் சரக்கு மற்றும் சேவை வரித் துறை இணைஆணையர் எஸ். விஜயராணி, கல்லூரி முன்னாள் முதல்வர் வி.சசிகலா, உச்ச நீதிமன்ற முன்னாள் துணைத் தலைவர் வி.சேகர், தில்லி தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் கே.பென்னேஸ்வரன், தில்லி முத்தமிழ்ப் பேரவையின் பொதுச் செயலர் என்.கண்ணன், தில்லி தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவர் கே.வி.கே. பெருமாள், ஹயக்ரீவா அமைப்பின் தலைவர் ஆர்.குருச்சரண் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று பரிசுகள் வழங்கினர்.
 விழா ஏற்பாடுகளை செந்தமிழ்ப் பேரவை தலைவர் எம்.ரமேஷ், துணைத் தலைவர்கள் ஏ.எல். கணேஷ் குமார், பி.முத்து ரமேஷ் உள்பட பலர் செய்திருந்தனர். அமைப்பின் இணைச் செயலர் எஸ்.கிருஷ்ணராஜ் வரவேற்றார். பொருளாளர் ஏ.எம்.ஆறுமுகம் நன்றி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com