டென்மார்க் பெண் பாலியல் பலாத்கார வழக்கு: தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்

டென்மார்க் பெண் பயணி கூட்டு பாலியல் பலாக்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உறுதி செய்தது. 

டென்மார்க் பெண் பயணி கூட்டு பாலியல் பலாக்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உறுதி செய்தது. 
டென்மார்க்கைச் சேர்ந்த 52 வயது பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட மகேந்தர், முகமது ராஜா, ராஜு, அர்ஜூன் ராஜு, சக்கா ஆகிய 5 பேருக்கு சாகும் வரை சிறைத் தண்டனை விதித்து தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த 2016, ஜூன் 10-ஆம் தேதி தீர்ப்பளித்தது.
 இந்த தீர்ப்புக்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 
இந்த மேல் முறையீட்டு மனு, நீதிபதிகள் எஸ். முரளிதர், ஐ.எஸ். மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் பயணியின் சாட்சியமும் டிஎன்ஏ அறிக்கையும் குற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளது. 
மேலும், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் நீதிமன்றம் திருப்தி கொள்கிறது. எனவே, மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com