தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் இரு குட்டிகளை ஈன்ற வங்கப் புலி!

தில்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் வங்கப் புலிக்கு புதன்கிழமை அதிகாலை இரு அழகான குட்டிகள் பிறந்தன. இ

தில்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் வங்கப் புலிக்கு புதன்கிழமை அதிகாலை இரு அழகான குட்டிகள் பிறந்தன. இந்தக் குட்டிகள் மிகுந்த கவனமுடன் கண்காணிக்கப்பட்டு வருவதாக பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.
தில்லியில் புரானா கிலாவை ஒட்டியுள்ள பகுதியில் தேசிய உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. சுமார் 240-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பூங்காவில் மான், புலி, யானை, சிங்கம் என பல்வேறு விலங்குகளும், அரிதான உள்நாட்டு, வெளிநாட்டுப் பறவை இனங்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு வெள்ளை நிற வங்கப் புலிகளும் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தளித்து வருகின்றன. இந்நிலையில், இந்தப் பூங்காவில் உள்ள பெண் புலிக்கு புதன்கிழமை இரு குட்டிகள் பிறந்துள்ளன.
இது குறித்து தேசிய உயிரியல் பூங்காவின் இயக்குநர் ரேனு சிங் கூறியதாவது: தேசிய உயிரியல் பூங்காவில் நிபயா எனும் மூன்று வயது பெண் புலிக்கும், ஐந்து வயதுடைய "ராயல் டைகர்' கரனுக்கும் இந்த இரு புலிக் குட்டிகளும் பிறந்துள்ளன. இந்த குட்டிகள் பிறந்திருப்பது பூங்கா நிர்வாகத்திற்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும். வெள்ளைப் பெண் புலி கடந்த ஒரு வாரமாக சற்றுத் தளர்வாக இருந்தது. இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை இரு புலிக் குட்டிகளை ஈன்றது. இந்த இரு குட்டிகளும் ராயல் பெங்கால் புலிகளாகும். ஆரோக்கியமுடன் காணப்படுகின்றன. எனினும், அடுத்த இரு மாதங்களுக்கு இரு குட்டிகளும் தொடர்ந்து கண்காணிக்கப்படும். இவற்றுக்கு சிறப்பு உணவுகள் வழங்கப்படும். மேலும், பெண் புலி அடைக்கப்பட்டுள்ள பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 
இவற்றின் மூலம் பெண் புலி, அவற்றின் குட்டிகளின் உடல் ஆரோக்கியம் கண்காணிக்கப்படுகிறது. மேலும், அவற்றுக்கு உரிய வகையில் உணவு எடுத்துக்கொள்கிறதா, கவனிக்கப்படுகின்றவனா என்பதைக் கண்டறியும் வகையில் அவற்றின் நடத்தையை சிசிடிவி மூலம் கண்காணித்து வருகிறோம். குட்டிகள் இரண்டும் ஆரோக்கியமாக உள்ளன. அவை தானாகவே நடக்கப் பழக வேண்டியுள்ளதால் இதற்கு சிறிது காலமாகும். அதன் பிறகு பார்வையாளர்களுக்கு புலிக் குட்டிகள் காட்சிப்படுத்தப்படும். பொதுவாக இதற்கு இரு மாதங்கள் ஆகும் என்றார் அவர்.
இப்பூங்காவில் உள்ள பிரியா எனும் பெயரிலான 25 வயதான பெண் புலி வயது முதுமை காரணமாக அண்மையில் இறந்தது குறிப்பிடத்தக்ககது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com