குரு கிரந்த சாகிப்  புனித நூலுக்கு  தேவை அதிகரிப்பு: டிஎஸ்ஜிஎம்சி புதிய முடிவு

குருகிரந்த் சாகிப்புனித நூலுக்கு அதிகரித்து வரும் தேவையைக் கருத்தில் கொண்டு, சர்வதேச கணினிமய அச்சு இயந்திர வசதியை ஏற்படுத்த தில்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழு (டி எஸ்ஜிஎம்சி) முடிவு செய்துள்ளது.

குருகிரந்த் சாகிப்புனித நூலுக்கு அதிகரித்து வரும் தேவையைக் கருத்தில் கொண்டு, சர்வதேச கணினிமய அச்சு இயந்திர வசதியை ஏற்படுத்த தில்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழு (டி எஸ்ஜிஎம்சி) முடிவு செய்துள்ளது.
இந்தப் புதிய அச்சக இயந்திரமானது நாளொன்றுக்கு 15 ஆயிரம் பக்கங்களை அச்சடிக்கும் திறன் கொண்டிருக்கும் என்று என்று தில்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழுவின் தலைவர் மஞ்சித் சிங் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: இந்த அச்சு இயந்திரம் ரகப் கஞ்ச் குருத்வாரா வளாகத்தில் ரூ.8 கோடியில் அமைக்கப்பட உள்ளது. இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் 
இதர குர்மத் இலக்கியம் உள்பட குருகிரந்த் சாகிப்பின் அதிகாரப்பூர்வ பதிவுகளை வெளியிட சட்ட உரிமையையும், சிறப்பு உரிமையையும் அம்ருத்சரஸில் உள்ள சிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டி (எஸ்ஜிபிசி), டிஎஸ்ஜிஎம்சி ஆகிய இரண்டு அமைப்புகளும் பெற்றுள்ளன. 
இப்புதிய அச்சு இயந்திரமானது 20 ஆண்டுகள் பழைய இயந்தித்திற்கு மாற்றாக நிறுவப்பட உள்ளது. இதன் மூலம் இதுவரை குரு கிரந்த சாகிப்பின் புனித நூல் தோராயமாக ஒரு லட்சம் பிரதிதிகள் அச்சடிக்கப்பட்டுள்ளன. 
1,430 பக்கங்கள் கொண்ட குரு கிரந்த சாகிப்பில் சீக்கிய குருக்களின் புனித வசனங்களும், கபீர், ரவிதாஸ், நம்தேவ் போன்ற 30 இதர புனிதர்களின் வசனங்களும் இடம் பெற்றுள்ளன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com