குருகிராமில் போதைப் பொருள் விற்றதாக  இரண்டு நைஜீரியர்கள் கைது

தேசியத் தலைநகர் வலயம், குருகிராமில் போதைப் பொருள் விற்றதாக நைஜீரிய நாட்டைச் சேர்ந்த 2 பேரை சிறப்புப் படைப் போலீஸார் கைது செய்தனர்.

தேசியத் தலைநகர் வலயம், குருகிராமில் போதைப் பொருள் விற்றதாக நைஜீரிய நாட்டைச் சேர்ந்த 2 பேரை சிறப்புப் படைப் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.7 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இது குறித்து குருகிராம் போலீஸார் தெரிவித்ததாவது: குருகிராம் பகுதியில் உள்ள கேளிக்கை விடுதிகள், மதுபானக் கூடங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் போதைப் பொருள் விநியோகத்தில் ஒரு கும்பலைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருதாக போலீஸாருக்கு புகார் வந்தது. 
இந்நிலையில், தனிப்படை போலீஸார் குருகிராம் பகுதியில் உள்ள "இப்கோ சௌக்' பகுதியில் சம்பவத்தன்று இருவரை கைது செய்தனர். 
விசாரணையில் இருவரும் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த யுசி ஒக்கோலியே (40), யோகோ கௌவாடியோ (32) ஆகியோர் எனத் தெரிய வந்தது. அவர்களிடமிருந்து ரூ.7 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், யுசி ஒக்கோலியே துணி வியாபாரம் செய்வதற்காக 2016-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தார். தமிழகத்தில் உள்ள திருப்பூரில் துணி வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், நைஜீரியாவைச் சேர்ந்த போதை மருந்து விற்பனை செய்யும் சிறு வியாபாரிகளுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, தில்லி வந்த அவர், யோகாவுடன் பழகினார். 
அவர் ஏற்கெனவே துவாரகா பகுதியில் போதைப் பொருள் விற்று வந்தார். பின்னர், இருவரும் சேர்ந்து தேசியத் தலைநகர் வலயப் பகுதியில் போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. 
இருவர் மீதும் குருகிராம் செக்டார் 18 காவல் நிலையத்தில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருள் விநியோக கும்பலைச் சேர்ந்த மற்றவர்களையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com