மாவட்டந்தோறும் குழந்தைகள் நலக் குழு ஏற்படுத்த விஜேந்தர் குப்தா வலியுறுத்தல்

சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் மாவட்டந்தோறும் குழந்தைகள் நலக் குழுவை ஏற்படுத்த வேண்டும் என தில்லி அரசை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா வலியுறுத்தியுள்ளார்.

சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் மாவட்டந்தோறும் குழந்தைகள் நலக் குழுவை ஏற்படுத்த வேண்டும் என தில்லி அரசை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அண்டை மாநிலங்களிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சிறார்கள் தில்லிக்கு வாழ்வாதாரம் தேடி நாள்தோறும் வருகின்றனர். அவர்கள் தெருவோரம் வசிக்கத் தொடங்குகின்றனர். அருகில் உள்ள தாபாக்கள், கடைகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் வேலை செய்கின்றனர். சிறார் நீதிச் சட்டத்தின் (2000) கீழ், இதுபோன்ற சிறார்களுக்குப் பாதுகாப்பையும், பராமரிப்பையும் அளிப்பது தில்லி அரசின் கடமையாகும்.
சிறார் இல்லங்களும் இதுபோன்ற சிறாருக்கு உரிய உதவிகளை அளிக்க வேண்டும். சமூக நலத் துறையின் கீழ் இயங்கும் குழந்தைகள் நலக் குழுவும் சிறார் இல்லங்களை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். மேலும், சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் மாவட்டந்தோறும் குழந்தைகள் நலக் குழு உருவாக்க வேண்டும். மோசமான நிலையைக் கருத்தில் கொண்டு சிறார்களுக்கு தில்லி அரசின் சார்பில் சிறார் இல்லங்களை கூடுதலாக உருவாக்க வேண்டும். குழந்தைகள் நலக் குழுவின் பணிகள் குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அப்போதுதான் சுரண்டல், குற்றங்கள் ஆகியவற்றிலிருந்து சிறார்களைப் பாதுகாக்க முடியும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com