திலக் விஹாரில் 6 ஏக்கர் பரப்பளவில் பூங்கா: டியுஎஸ்ஐபி கூட்டத்தில் ஒப்புதல்

திலக் விஹாரில் 6 ஏக்கர் பரப்பளவில் பூங்காவை உருவாக்கும் முன்மொழிவுக்கு தில்லி நகர்ப்புற குடிசைகள் மேம்பாட்டு வாரிய (டியுஎஸ்ஐபி) கூட்டத்தில்

திலக் விஹாரில் 6 ஏக்கர் பரப்பளவில் பூங்காவை உருவாக்கும் முன்மொழிவுக்கு தில்லி நகர்ப்புற குடிசைகள் மேம்பாட்டு வாரிய (டியுஎஸ்ஐபி) கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தில்லி தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை டியுஎஸ்ஐபியின் 22-ஆவது கூட்டம் அதன் தலைவரும், முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் போது பல முக்கிய முன்மொழிவுகளுக்கு ஒப்புதல்கள் அளிக்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு:
அனைத்து ஜே.ஜே. குடிசைப் பகுதிகளிலும் பழுது பார்ப்புப் பணிகள் உள்பட வடிகால் மற்றும் கான்கிரீட் நடைபாதைகள் பணிகளை முடிப்பதற்காகன ஒருங்கிணைந்த மதிப்பீட்டை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.
தில்லியில் உள்ள அனைத்து ஜன் சுவிதா சுகாதார வளாகங்களை தூய்மையாகப் பராமரிக்கும் வகையில், அனைத்து ஜே.ஜே. குடிசைப் பகுதிகளில் உள்ள 700 ஜன் சுவிதா வளாகங்களின் பராமரிப்புக்காக சிறப்புமிக்க முகமைகளை ஈடுபடுத்துவதற்கு கூட்டத்தில் ஒப்புதல்அளிக்கப்பட்டது.
தில்லியில் உள்ள அனைத்து ஜே.ஜே. குடிசைப் பகுதிகளின் சர்வே செய்யப்பட்ட விடுகளில் வசிப்போருக்கு புகைப்படத்துடன் கூடிய தற்காலிக சர்வே சான்றிதழை வழங்குவதற்கும் கூட்டத்தில் ஒப்புதல்அளிக்கப்பட்டது. மேலும், தில்லி நகர்ப்புற குடிசை மேம்பாட்டு வாரியத்தின் "சிஷு வாடிகா' இடங்களில் திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடத்தை அமைக்கவும், திலக் விஹாரில் 6 ஏக்கர் பரப்பளவில் பூங்காவை உருவாக்கவும் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மடிப்பூரில் சுகாதாரப் பணிகள் இயக்கக துறைக்கு 1.18 ஏக்கர் நிலத்தை கூடுதலாக அளிக்கவும், டியுஎஸ்ஐபி நிலங்கள் மற்றும் சொத்துகளில் ஆம் ஆத்மி மொஹல்லா கிளினிக்குகளை திறப்பதற்கு கூடுதல் இடங்கள் அளிக்கவும் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.  குடிசை வளர்ச்சி மையம், சிஷு வாடிகா, ஜன் சுவிதா சுகாதார வளாகம், இரவு நேரக் குடில்கள் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவற்காக 22-ஆவது டியுஎஸ்ஐபி கூட்டத்தில் ரூ.785.21 கோடி மதிப்பில் 2018-19 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com