தில்லியில் வணிகர்கள் கடையடைப்புப் போராட்டம்

தில்லி மாநகராட்சிகள் மேற்கொண்டு வரும் சீலிங் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தில்லி மார்க்கெட் பகுதிகளில் வணிகர்கள் செவ்வாய்கிழமை

தில்லி மாநகராட்சிகள் மேற்கொண்டு வரும் சீலிங் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தில்லி மார்க்கெட் பகுதிகளில் வணிகர்கள் செவ்வாய்கிழமை கடையடைப்புப் போராட்டம்  நடத்தினர். அகில இந்திய வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு (சிஏஐடி) இந்தப் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. 
தில்லியில் அமர் காலனி, கரோல் பாக், கரீபோலி, கஷ்மீரி கேட் ஆகிய முக்கிய சந்தைகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வணிகர்கள் கறுப்புக் கொடி ஏந்தி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். கடையடைப்பு காரணமாக முக்கியச் சந்தைகளில் பெரும்பாலானவை வெறிச்சோடிக் காணப்பட்டன.
இது தொடர்பாக அகில இந்திய வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீண் கண்டேல்வால் கூறியதாவது: 
கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சீலிங் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. அதிலிருந்தே சீலிங் நடவடிக்கையைக் கைவிடுமாறு கோரிக்கை வைத்து வருகிறோம். அமர் காலனி, லாஜ்பத் நகர் ஆகிய இடங்களில் மாநகராட்சிகள் அண்மையில் மேற்கொண்ட சீலிங் நடவடிக்கை தில்லி முனிசிபல் கவுன்சில் சட்டத்துக்கு எதிரானதாகும். இதைச் சுட்டிக் காட்டி லாஜ்பத் நகரில் சீலிங் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட அன்றே சுமார் 350 வணிகர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com