லாஜ்பத் நகர் மேம்பாலத்தில்  மீண்டும் போக்குவரத்து தொடக்கம்

பழுதுபார்ப்புப் பணிக்காக மூடப்பட்டிருந்த தில்லி லாஜ்பத் நகர் மேம்பாலத்தின் ஒரு பகுதி தற்போது மீண்டும் போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டுள்ளது.

பழுதுபார்ப்புப் பணிக்காக மூடப்பட்டிருந்த தில்லி லாஜ்பத் நகர் மேம்பாலத்தின் ஒரு பகுதி தற்போது மீண்டும் போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலாத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த பழுதுபார்ப்புப் பணியை பொதுப்பணித் துறை கடந்த இரண்டு நாள்களுக்கு முன் முடித்தது. இதையடுத்து, சோதனை ஓட்டத்துக்குப் பிறகு பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி வியாழக்கிழமை முதல் இந்த மேம்பாலம் வாகனக் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்த மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து பழுதுபார்ப்புப் பணி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. மேம்பாலத்தில் விரிசல் விழுந்த பகுதியில் பழுதுபார்ப்புப் பணியை தில்லி அரசு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்க திட்டமிட்டது. இதன்படி, இந்த ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி பணி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், போக்குவரத்தை மாற்றுப் பாதையில் திருப்பிவிடுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் பழுதுபார்ப்புப் பணி தாமதமடைந்து வந்தது. மேலும், குடியரசு தின விழாவையொட்டி பழுதுபார்ப்புப் பணியை பிப்ரவரியில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பான பணிகள் காரணமாக திட்டமிட்டப்படி பிப்ரவரியில் பழுதுபார்ப்புப் பணி மேற்கொள்ள முடியவில்லை. இதனால், பழுதுபார்ப்புப் பணி மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த மே 15-ஆம் தேதி பழுதுபார்ப்புப் பணி தொடங்கியது. இப்பணியை மே 30-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதனால், இப்பாலத்தில் பழுது ஏற்பட்டிருந்த பகுதி வழியாக போக்குவரத்து நடைபெற தடை விதிக்கப்பட்டது. சில நேரங்களில் மக்களுக்கு இதன் மூலம் சிரமங்கள் ஏற்ப்பட்டாலும், அவர்கள் அளித்த முழு ஒத்துழைப்பு காரணமாக பழுது பார்ப்புப் பணி மிக துரிதமாக மேற்கொள்ள வழி ஏற்பட்டது. நிர்ணயிக்கப்பட் காலத்துக்கு ஒரு வாரம் முன்னதாகவே பழுதுபார்ப்புப் பணி முடிக்கப்பட்டுவிட்டது. இருப்பினும், சோதனை பணிக்காக உடனே திறக்கப்படவில்லை. விரிசல்கள் முழுமையாக அடைக்கப்பட்டு சரி செய்யப்பட்டுவிட்டன. இருப்பினும் கண்காணிப்பு தொடர்கிறது. மேலும், பழுதுபார்ப்புப் பணி காரணமாக குண்டும் குழியுமாக இருந்த சாலையும் சீரமைக்கப்பட்டுள்ளது. தற்போது அனைத்துப் பணிகளும் முழுமையாக முடிவடைந்து, வாகனப் போக்குவரத்துக்காக பாலம் திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பழுதுபார்க்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் ஏதும் விரிசல் ஏற்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும் வகையில் ஒரு முறை சோதனை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com