ஜெனீவாவில் நாடாளுமன்றங்கள் ஒன்றியக் கூட்டம்: சுமித்ரா மகாஜன் தலைமையில் எம்பிக்கள் குழு பயணம்

ஜெனீவாவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றங்கள் ஒன்றியக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மக்களவைத் தலைவர்

ஜெனீவாவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றங்கள் ஒன்றியக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமையில் எம்பிக்கள் குழு வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றது.
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் வரும் அக்டோபர் 14 முதல் 18-ஆம் தேதி வரை நாடாளுமன்றங்கள் ஒன்றியத்தின் 139-ஆவது அவைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் இந்தியா சார்பில் மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமையில் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் குழு தில்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றது. இந்தக் குழுவில், மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஹரிவன்ஷ், மக்களவைத் துணைத் தலைவர் டாக்டர் எம்.தம்பிதுரை, எம்பிக்கள் டாக்டர் சஞ்சய் ஜெய்ஸ்வால், நாகேந்திர சிங், டாக்டர் ஹரி பாபு கம்பம்பதி, ஹரிஷ் சந்திர மீனா, ஹரீஷ் சந்திர மீனா, டாக்டர் ஹீனா விஜய்குமார் கவித், பிரத்யுஷா ராஜேஸ்வரி சிங், மக்களவைத் தலைமைச் செயலர் ஸ்நேஹலதா ஸ்ரீவாஸ்தவா, மாநிலங்களவை தலைமைச் செயலர் தேஷ் தீபக் வர்மா, பிரதிநிதிகள் குழுச் செயலர் பி.சி. கௌல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் "புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப மாற்ற யுகத்தில் அமைதி, வளர்ச்சியை ஊக்குவிப்பதில் நாடாளுமன்றத் தலைமைப்பண்பு' எனும் கருப்பொருளில் பொதுவான விவாதம் நடைபெறுகிறது. இதில் 178 நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவைத் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.
 இதையொட்டி அங்கு நடைபெறும் நாடாளுமன்ற ஒன்றியத்தின் நான்கு நிலைக் குழுக்கள், பெண் நாடாளுமன்றவாதிகள் அமைப்பு, இளம் நாடாளுமன்றவாதிகள்அமைப்பு, சுகாதாரம் தொடர்புடைய ஆலோசனைக் குழு, ஆட்சிமன்றக் குழு ஆகிய கூட்டங்களில் இந்திய நாடாளுமன்றப் பிரதிநிதிகள் குழு பங்கேற்க உள்ளது. மேலும், பல்வேறு விவகாரங்கள் தொடர்புடைய வரைவுக் குழு நடைமுறை தீர்மானங்களில் பங்கேற்கவும் இந்தியாவுக்கு வாய்ப்புக் கிடைக்க உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com