பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு 5,600 குடியிருப்புகள்: தில்லி அரசு ஒப்புதல்

தில்லியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு ரூ. 737.26 கோடியில் 5,600 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட தில்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தில்லியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு ரூ. 737.26 கோடியில் 5,600 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட தில்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் தில்லி நகர்ப்புற வீட்டு வசதி மேம்பாட்டு வாரியத்தின் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பிறகு தில்லி நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் சத்யேந்தர ஜெயின் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பால்ஸ்வா, சங்கம் பார்க், லாஜ்பத் நகர், கரோல் பாகில் உள்ள தேவ் நகர் ஆகிய பகுதிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு  5,594 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட தில்லி நகர்ப்புற வீட்டு வசதி மேம்பாட்டு வாரியம் ஒப்புதல் வழங்கி உள்ளது. தில்லி அரசின் பெருமைக்குரிய கொள்கையான, குடிசை வாழ் மக்களுக்கான மறுசீரமைப்பு திட்டத்தின்கீழ் இந்த குடியிருப்புகள் கட்டப்படும்.
பால்ஸ்வா - ஜஹாங்கீர்புரியில் 3,780 குடியிருப்புகளும், சங்கம் பார்க் பகுதியில் 582 குடியிருப்புகளும், லாஜ்பத் நகரில் 448 குடியிருப்புகளும், தேவ் நகரில் 784 குடியிருப்புகளும் கட்டப்படும். இந்தப் பகுதிகளில் சாலைகள், தெரு விளக்குகள், பூங்காக்கள் அமைக்க தில்லி நகர்ப்புற வீட்டு வசதி மேம்பாட்டு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com