காஷ்மீரில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம்: பாஜக நம்பிக்கை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அடுத்து நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அடுத்து நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் ரவீந்தர் ரெய்னா கூறினார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
லடாக் பகுதியில் பாஜகவின் பலம் குறைவாக இருப்பதற்கான காரணத்தை கண்டறிந்து, அதை சரி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கட்சியைச் சேர்ந்த இரு நபர் குழு திங்கள்கிழமை லடாக் வருகிறது. ஜம்மு பகுதியில் பாஜகவுக்கு குறிப்பிடத்தக்க பெரும்பான்மை கிடைத்துள்ளது.
காஷ்மீரில் ஒரு காலத்தில் கட்சியின் கொடியை ஏந்துவதற்கு கூட ஆள் இருந்ததில்லை. 
ஆனால் அந்த பிராந்தியத்தில் இப்போது கட்சியின் வளர்ச்சி அபாரமாக உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் 106 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளோம். கடந்த பேரவைத் தேர்தலில் 44-க்கும் கூடுதலா தொகுதிகளை கைப்பற்றுவதே எங்களின் இலக்காக இருந்தது.
ஆனால், அடுத்து நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 50-க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றுவதே எங்களின் இலக்காகும். அத்தனை தொகுதிகளை கைப்பற்றுவதன் மூலம் தனிப்பெரும்பான்மையுடன் ஜம்மு காஷ்மீரில் ஆட்சியமைப்போம். முதல்வர் எங்கள் கட்சியைச் சேர்ந்தவராக இருப்பார்.
பிரதமர் மோடி "காங்கிரஸ் இல்லா இந்தியா' என்ற முழக்கத்தை முன் வைத்துள்ளதைப் போல, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் "பயங்கரவாதமற்ற ஜம்மு காஷ்மீர்' என்ற இலக்கைக் கொண்டுள்ளனர். பயங்ரவாதிகளுக்கு எதிரான அடுத்தடுத்த வெற்றிகரமான நடவடிக்கைகள் மூலமாக மாநிலத்தை அவர்கள் மேம்படுத்தி வருகின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மூலமாக, பயங்கரவாதிகளுக்கும், பிரிவினைவாதிகளுக்கும், தேர்தலை புறக்கணித்த பிரதான கட்சிகளுக்கும் மக்கள் தகுந்த பதிலடி கொடுத்து, ஜனநாயக நடைமுறை மீதான தங்களின் நம்பிக்கையை உறுதி செய்துள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்றது, ஜனநாயகம் மற்றும் தேசத்துக்கான வெற்றியாகும்.
ஸ்ரீநகர் நகராட்சியில் மேயரை முடிவு செய்யும் முக்கிய இடத்தில் தற்போது பாஜக உள்ளது என்று ரவீந்தர் ரெய்னா கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com