ஓ.பி. சர்மாவுக்கு எதிரான வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அமீக் ஜமாயை நீதிமன்ற வளாகத்தில் தில்லி பாஜக எம்எல்ஏ ஓ.பி. சர்மா தாக்கியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அமீக் ஜமாயை நீதிமன்ற வளாகத்தில் தில்லி பாஜக எம்எல்ஏ ஓ.பி. சர்மா தாக்கியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கு தில்லி பெருநகர நீதிமன்றத்தின் கூடுதல் தலைமை நீதிபதி சமர் விஷால் முன் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தில்லி போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், ஓ.பி. சர்மாவும், அடையாளம் தெரியாத சிலரும் அமீக் ஜமாயை தாக்கியது மட்டுமல்லாமல், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாக கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, வழக்கின் ஆவணங்களை சரிபார்ப்பது தொடர்பான விவசாரணை செப்டம்பர் 26ஆம் தேதி நடைபெறும் என்று நீதிபதி தெரிவித்தார்.
2016ஆம் ஆண்டு, தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமார் பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மோதலில் அமீக் ஜமாயை ஓ.பி. சர்மா தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com