திலக் நகர் காவல் நிலையத்தில் "தூய்மைதான் சேவை' நிகழ்ச்சி

திலக் நகர் காவல் நிலையத்தில் தூய்மைதான் சேவை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தில்லி காவல் துறை ஆணையர் அமுல்யா பட்நாயக்


திலக் நகர் காவல் நிலையத்தில் தூய்மைதான் சேவை நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தில்லி காவல் துறை ஆணையர் அமுல்யா பட்நாயக் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்று காவல் நிலையப் பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
செப்டம்பர் 15-ஆம் தேதியில்இருந்து அக்டோபர் 2-ஆம் தேதி வரை "தூய்மைதான் சேவை' எனும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக திலக் நகர் காவல் நிலையத்தில் சனிக்கிழமை காவல் துறை ஆணையர் அமுல்யா பட்நாயக் மூலம் இத்திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது.
இந்த தூய்மைப் பிரசாரமானது ஒரே நேரத்தில் தில்லியில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், குடியிருப்புப் பகுதிகளில் மேற்கொள்ளப்படுவதாக காவல் ஆணையர் அமுல்யா பட்நாயக் தெரிவித்தார்.
மேலும், தினசரி வாழ்வில் தூய்மையின் அவசியம் குறித்தும், ஆண்டு முழுவதும் தில்லி காவல் துறையின் மூலம் தூய்மைக்கு அளிக்கப்பட்டு வரும் முக்கியத்துவம் குறித்தும் அவர் எடுத்துரைத்தார். அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்களுக்கு உகந்த சுற்றுச்சூழலை ஏற்படுத்தும் வகையில் தூய்மை கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகவும், போலீஸாருடன் இணைந்து செயல்பட பொதுமக்கள் ஒத்துழைப்புஅளிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
காவல் நிலையங்களில் தூய்மையைப் பராமரிப்பதில் சிறந்த வகையில் செயல்படும் ஊழியர்களுக்கு தூய்மைப் பாதுகாப்பு சாதனங்களையும், நினைவுப் பரிசுகளையும் ஆணையர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தெற்கு தில்லி காவல் துறையின் உயர் அதிகாரிகள், சிறப்பு காவல் ஆணையர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com