தூய்மை இந்தியா திட்டம் மக்கள்இயக்கமாக மாற வேண்டும்: எஸ்டிஎம்சி மேயர்

பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான தூய்மை இந்தியா திட்டம் அனைத்து மக்களும் பங்கெடுக்கும் வகையில் மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) மேயர் நரேந்தர் சாவ்லா தெரிவித்தார்.


பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான தூய்மை இந்தியா திட்டம் அனைத்து மக்களும் பங்கெடுக்கும் வகையில் மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) மேயர் நரேந்தர் சாவ்லா தெரிவித்தார்.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் எஸ்டிஎம்சி பகுதிக்குள்பட்ட வரலாற்று நினைவுச் சின்னங்களை தூய்மைப்படுத்தும் பணி சனிக்கிழமை தொடங்கியது. அதன்படி, குதூப்மினார் பகுதியில் சனிக்கிழமை தூய்மைப் பணிகள் நடைபெற்றன. இந்தப் பணிகளில் எஸ்டிஎம்சி மேயர் நரேந்தர் சாவ்லா, அவைத் தலைவர் கமல்ஜீத் ஷெராவத், நிலைக் குழுத் தலைவர் ஷிக்கா ராய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் நரேந்தர் சாவ்லா பேசியதாவது:
எஸ்டிஎம்சி பகுதிகளில் பல வரலாற்று சிறப்பு மிக்க நினைவுச் சின்னங்கள் உள்ளன. இவற்றைப் பார்வையிட பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் இவ்விடங்களுக்கு வருகை தருகின்றனர். இப்பகுதிகளை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்கும் வகையில் எஸ்டிஎம்சி இவற்றை நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் தூய்மைப்படுத்தவுள்ளோம். எமது தூய்மைப் பணிகளை குதூப் மினாரில் இருந்து ஆரம்பித்துள்ளோம். பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான தூய்மை இந்தியா திட்டம் வெறுமனே மத்திய அரசின் திட்டமாக மட்டும் அல்லாமல் இத்திட்டம் மக்கள் இயக்கமாக மாற்றப்பட வேண்டும். தமது பகுதிகளைத் தூய்மையாகப் பேணுவதை மக்கள் தமது கடமையாக நினைத்து செயல்பட வேண்டும். தூய்மை இந்தியா திட்டத்தில் கடந்த ஆண்டு 204 -ஆவது இடத்தில் பின்தங்கியிருந்த எஸ்டிஎம்சி மக்கள் ஒத்துழைப்புடன் இவ்வாண்டு 32-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. மக்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com