மின் இணைப்புக் கம்பிகளை துண்டித்துச் செல்லும் லாரிகள்

அருமனை, குலசேகரம் சாலையில் வீடுகளுக்கான மின் இணைப்புக் கம்பிகளை லாரிகள் துண்டித்துச் செல்வதால் மக்கள் தொடர் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

அருமனை, குலசேகரம் சாலையில் வீடுகளுக்கான மின் இணைப்புக் கம்பிகளை லாரிகள் துண்டித்துச் செல்வதால் மக்கள் தொடர் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
மார்த்தாண்டத்தில் உயர் நிலைப் பாலம் கட்டும் பணிகள் நடைபெறும் நிலையில், திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திருநெல்வேலி மற்றும் வெளி மாநிலங்களுக்குச் செல்லும் லாரிகள் மாற்றுச் சாலையான அருமனை, குலசேகரம், சுருளகோடு, ஆரல்வாய்மொழி சாலையில் இயக்கப்படுகின்றன. இதில் அதிக உயரம் கொண்ட கனரக சரக்குப் பெட்டக லாரிகள், இப்பாதையில் வீடுகளுக்கான மின் இணைப்புக் கம்பிகளை துண்டித்துவிட்டுச் செல்வது வாடிக்கையான நிகழ்வாக மாறியுள்ளது. சில வீடுகளில் மின் கம்பிகள் துண்டிக்கப்படுவதுடன், மீட்டர் பெட்டிகள் வரை இதனால் சேதமாகின்றன. இவற்றைச் சரிசெய்வதற்கு பல ஆயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படுவதாக மக்கள் கூறுகின்றனர்.
அருமனை, களியல், குலசேகரம் பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலையில் வந்த ஒரு லாரி, பல வீடுகளின் மின் இணைப்பை துண்டித்தவாறு சென்றது. இதனால் இப்பகுதியில் நாள் முழுவதும் மின்தடை ஏற்பட்டதுடன், மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட மக்களுக்கு பெரும் பொருள் செலவும் ஏற்பட்டது.
கடந்த 3 மாதங்களுக்கு மேலாக இது போன்ற சம்பவங்கள் தொடரும் நிலையில், மின்சார வாரியம் போதிய நடவடிக்கை எடுக்காமல் செயல்படுவதாகவே மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
லாரிகளை மாற்றுப் பாதையில் இயக்குவதற்கு முன்பு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மின்சார வாரியம் எடுக்கவில்லையெனவும், தாழ்வாகக் கிடக்கும் மின் இணைப்புக் கம்பிகளை உயர்த்திக் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் பொதுமக்கள் குறை கூறி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com