மே 10 ல் வருங்கால வைப்புநிதி குறைதீர் சிறப்பு முகாம்

நாகர்கோவிலில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி குறைதீர் சிறப்பு முகாம் மே 10 ஆம் தேதி நடைபெறுகிறது.

நாகர்கோவிலில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி குறைதீர் சிறப்பு முகாம் மே 10 ஆம் தேதி நடைபெறுகிறது.
இது குறித்து நாகர்கோவில் வருங்கால வைப்புநிதி உதவி ஆணையர் சுமன் சொளரப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு; வைப்புநிதி சம்பந்தமாக கருத்து பரிமாற்றம் செய்யவும், முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்ளவும் மற்றும் தொழிலாளர்கள், தொழில் நிறுவனங்களின் குறைகளை நிவர்த்தி செய்வதையும் எளிதாக்கும் பொருட்டு, வைப்பு நிதி உங்கள் அருகில் என்ற நிகழ்ச்சி மே 10 ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை உறுப்பினர், தொழிலாளர்களுக்கும், பிற்பகல் 3 மணியில் இருந்து மாலை 4 மணி வரை தொழில் நிறுவனர்களுக்கும் நாகர்கோவில் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
வருங்கால வைப்பு நிதி சந்தாதாரராக சேர தகுதியிருந்தும் சேராமல் இருப்பவர்கள், உலகளாவிய கணக்கு எண் கிடைக்கப்பெறாதவர்கள், செயலிழந்த உறுப்பினர் கணக்கை முடிக்க விரும்புபவர்கள், மாத சந்தா செலுத்துவது தொடர்பான குறையுள்ளவர்கள், விண்ணப்பம் அனுப்பி உரிய காலத்தில் வைப்புநிதி கிடைக்கப் பெறாதவர்கள், ஓய்வூதியம் மற்றும் ஆண்டுச்சந்தா தொடர்பான குறைகள் நீண்ட நாள்களாக தீர்க்கப்படாமல் இருந்தால், மேற்கூறிய நாளில் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையரை நேரில் சந்தித்து தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
மேலும் தொழில் நிறுவனங்கள் பி.எப். பணம் கட்டுவது, உலகளாவிய கணக்கு எண் ஒதுக்கீடு செய்வது, புதிய உறுப்பினர்களை வைப்பு நிதியில் சேர்த்து கொள்வது தொடர்பான நவீன தொழில்நுட்பங்கள் குறித்த தங்கள் சந்தேகங்களையும் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
இந்நிகழ்ச்சியில் மண்டல ஆணையரை சந்திக்க விரும்புபவர்கள் தங்களது விண்ணப்பத்தை மே 5 ஆம் தேதிக்குள் அலுவலக வரவேற்பு அறையில் நேரிலோ அல்லது வருங்கால வைப்பு நிதி ஆணையரின் முகவரிக்கு தபால் மூலமாகவோ அனுப்பி பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com