ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் ஆக. 19 இல் இலவச மருத்துவ முகாம்

நாகர்கோவில் கோட்டாறில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் சல்ய தந்திர பிரிவின் சார்பில் ஆக. 19 ஆம் தேதி இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

நாகர்கோவில் கோட்டாறில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் சல்ய தந்திர பிரிவின் சார்பில் ஆக. 19 ஆம் தேதி இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.
முகாமை நாகர்கோவில் காவல் துணை கண்காணிப்பாளர் கோபி தொடங்கி வைக்கிறார். இம் முகாமில் 4 சிறப்பு மருத்துவர்களின் சேவையோடு, ஒரு வாரத்துக்கான மருந்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. மூல நோய்களுக்கான கஷார சூத்ர மற்றும் கஷார கர்ம சிகிச்சை, தோல் நோய்கள், புண்களுக்கு அட்டை விடுதல் சிகிச்சை, ப்ரச்சான்னம், வெரிகோஸ் நரம்புகளுக்கு சிராவ்யதனம், குதிகால் வலி, கைகால் மூட்டு வலிகளுக்கு அக்னி கர்ம சிகிச்சை ஆகியன இலவசமாக மருத்துவ முகாமில் வழங்கப்பட உள்ளது.
இம் முகாமில் எலும்பு முறிவினால் ஏற்படும் பாதிப்புகள், கழுத்து வலி, முதுகு வலி, மூட்டு வலி போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தேவைப்படும், நோயாளிகளுக்கு உள்நோயாளிகள் பிரிவிற்கான முன்பதிவும் இலவச முகாமன்று நடைபெற உள்ளது.  எனவே பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி முதல்வர் கிளாரன்ஸ் டேவி கேட்டுக் கொண்டுள்ளார்.  முகாமில் பங்கு பெற விரும்புவோர் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் சல்ய தந்திர பிரிவில் காலை 7.30 முதல், நண்பகல் 12 மணி வரை பதிவு செய்யலாம். மேல் விவரங்களுக்கு: 94875 -52472  என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com