கிராம சபை கூட்டத்தில் விலையில்லா வெள்ளாடு திட்டப் பயனாளிகள் தேர்வு

குமரி மாவட்டத்தில் ஆக. 15 இ ல் நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டப் பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

குமரி மாவட்டத்தில் ஆக. 15 இ ல் நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டப் பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இது குறித்து, மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் ஏழை மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்களில் ஒன்றான இலவச வெள்ளாடு வழங்கும் திட்டம் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நிகழாண்டிற்கான இத்திட்டத்தில் தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு 6 லட்சம் ஆடுகள் வழங்க ரூ.198.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, குமரி மாவட்டத்துக்கு ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் 844 அலகுகள் குறியீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் 4 ஊராட்சிகளில் 308 அலகுகளும் அக்டோபர் மாதத்தில் 6 ஊராட்சிகளில் 536 அலகுகளும் என மொத்தம் 844 அலகுகள் ஆடுகள் வாங்கி இலவசமாக வழங்கும் பணிகள்ஆக. 11 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இரவிபுதூர், கரும்பாட்டூர், கக்கோட்டுதலை, தேவிகோடு, மலையடி, அடைக்காகுழி, ஆத்திகாட்டு விளை, அருவிகரை, அருமநல்லூர் மற்றும் பீமநகரி பஞ்சாயத்துகளுக்கு ஆடுகள் வழங்க பயனாளிகள் தேர்வு சுதந்திரதினத்தன்று அந்தந்த ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் நடைபெற உள்ளது. தேர்வுக் குழுவில் உறுப்பினர்களாக கால்நடை உதவி மருத்துவர், ஊராட்சி ஒன்றிய அளவிலான அலுவலர்கள் மற்றும் ஆதிதிராவிட உறுப்பினர்கள் செயல்படுவார்கள். தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியரால் இறுதி செய்யப்படும் பட்டியலில் உள்ள பயனாளிகளுக்கு 4 வெள்ளாடுகள் இலவசமாக வழங்கப்படும்.
எனவே இலவச வெள்ளாடு வழங்கும் திட்டத்தில் பயன்பெற விரும்பும் நபர்கள் ஆக.15 ஆம் தேதி மேற்கூறிய ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பங்கு பெற்று விண்ணப்பங்கள் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com