குமரி பகவதியம்மன் கோயிலில் ஆடி களப பூஜை நிறைவு

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் 12 நாள்கள் நடைபெற்ற ஆடி களப பூஜை சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் 12 நாள்கள் நடைபெற்ற ஆடி களப பூஜை சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது.
இத்திருக்கோயிலில் நடைபெறும் முக்கிய பூஜைகளில் ஒன்றான ஆடிகளப பூஜை, அம்பாள் அவதரித்த ஆடி பூரம் நட்சத்திரம் முதல் தொடர்ந்து 12 நாள்கள் அம்பாளை குளிர்விப்பதற்காக நடத்தப்படுகிறது. நிகழாண்டு இந்த பூஜை ஜூலை 31-ஆம் தேதி தொடங்கியது.
இதையொட்டி, 12 நாள்களும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூபதரிசனம், நிர்மால்ய பூஜை, அதிகாலை 5 மணிக்கு அபிஷேகம், காலை 6.15 மணிக்கு தீபாராதனை, காலை 8 மணிக்கு ஸ்ரீபலி, காலை 8.15 மணிக்கு நிவேத்ய பூஜை ஆகியன நடைபெற்றது. காலை 10 மணிக்கு எண்ணெய், தேன், பால், பன்னீர், இளநீர், குங்குமம், பஞ்சாமிர்தம், களபம் போன்ற பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஜவ்வாது, அக்தர், புனுகு, பச்சைகற்பூரம், கோரேசனை, போன்ற வாசனைத் திரவியங்களை ஒன்றாக கலந்து கோயில் தந்திரி சங்கரநாராயணரூ அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தார். இதைத் தொடர்ந்து அம்மனுக்கு தங்கஆபரணங்கள், வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க அங்கி கவசம் அணிவிக்கப்பட்டு சந்தனக்காப்புஅலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிற்பகல் 12.30 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு அம்மனுக்கு ரோஜா, தாமரை, துளசி, பிச்சி போன்ற பல்வேறு மலர்களால் புஷ்பாபிஷேகம், இரவு 8.15 மணிக்கு பல்லக்கில் அம்பாள் எழுந்தருளி கோயில் வலம் வருதல், தொடர்ந்து வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு, அத்தாளபூஜையும், ஏகாந்ததீ பாராதனையும் நடைபெற்று வந்தது.
நிறைவு நாளான சனிக்கிழமை (ஆக. 12) உதயஅஸ்தமன பூஜை மற்றும் அதிவாச ஹோமத்துடன் ஆடிகளப பூஜை நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com