'பேரூராட்சிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்'

பேரூராட்சிகளில் பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் துப்பரவு பணியாளர்கள், குடிநீர் திட்ட பணியாளர்கள், உள்ளிட்ட அனைவரையும் காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்திடவேண்டும் என

பேரூராட்சிகளில் பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் துப்பரவு பணியாளர்கள், குடிநீர் திட்ட பணியாளர்கள், உள்ளிட்ட அனைவரையும் காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்திடவேண்டும் என ரி மாவட்ட உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தக்கலையில் சனிக்கிழமை நடைபெற்ற இம்மாநாட்டிற்கு ஊராட்சி ஊழியர்சங்க மாவட்டத் தலைவர் ஸ்டாலின்தாஸ் தலைமை வகித்தார். மாவட்ட துப்புரவு பணியாளர்சங்கத் தலைவர் சுடலை வரவேற்றார். சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலர் தங்க மோகன் மாநாட்டை தொடங்கிவைத்தார். செயலர் அமில்தாஸ், சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலர் சிங்காரன், மாவட்ட உதவித் தலைவர் செல்லப்பன்பிள்ளை, முன்னாள் எம்.பி . பெல்லார்மின் , பேரூராட்சி ஊழியர் சங்கத் தலைவர் தர்மகுல சிங்கம், ú மாவட்டத் தலைவர் கனகராஜ் ஆகியோர் பேசினர்.
சி.ஐ.டி.யூ. மாநில பொதுச் செயலர் கே.ஆர். கணேசன் சிறப்புரையாற்றினார். மாவட்டப் பொருளர் ஹென்றி லாரன்ஸ் நன்றி கூறினார். இதில் , பேரூராட்சிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சுயஉதவிகுழுக்கள் ஊதியம் வழங்கும் முறையை கைவிடவேண்டும். பேரூராட்சிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்ற அனைத்து பிரிவு ஊழியர்களுக்கும் நிரந்தர பணியாளர்களுக்கு வழங்குகின்ற ஊதியத்தை போல உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி சம வேலைக்கு சம ஊதியம் என்பதை அமல் படுத்தவேண்டும்.
துப்புரவு பணியாளர்களுக்கு ஒவ்வொரு பேரூராட்சி, ஊராட்சிகளிலும் குடியிருப்பு வசதிகள் செய்து கொடுக்கவேண்டும். கிராம ஊராட்சிகளில் பணி புரியும் ஊழியர்களுக்கு மாதாமாதம் ஊதியம் வழங்கவேண்டும். ஊராட்சிகளில் நிதி இல்லாத போது ஊராட்சி ஒன்றியங்களில் இருந்து ஊதியம் வழங்கிடவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com