தேன் உற்பத்தியில் குமரி மாவட்டம் முதலிடம்: ஆட்சியர் தகவல்

தேன் உற்பத்தியில் கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தில் முதலிடத்தில் உள்ளது என்றார் ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண்.

தேன் உற்பத்தியில் கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தில் முதலிடத்தில் உள்ளது என்றார் ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண்.
உலக தேனீ தினத்தை முன்னிட்டு, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், நாகர்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்ற தேனீ வளர்ப்பு கருத்தரங்குக்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியது: இம்மாவட்டத்தில் உலக தேனீ தினத்தை முன்னிட்டு, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பாக, தேசிய தோட்டக்கலை துறை இயக்கத் திட்டத்தின் கீழ், ஆக. 18, 19 ஆகிய இரு நாள்கள் மாவட்ட அளவிலான தேனீ வளர்ப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில், தோட்டக்கலை, வேளாண்மைத்துறை மற்றும் வேளாண்மை பல்கலைகழக பேராசிரியர்கள் தேனீ வளர்ப்பு வழிமுறைகள் குறித்து, விளக்கம் அளித்தனர். தேன் அதிகமாக உற்பத்தி செய்யும் மாவட்டத்தில், கன்னியாகுமரிமாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. குறிப்பாக, கல்குளம், விளவங்கோடு மற்றும் தோவாளை வட்டங்களிலிருந்து அதிகமாக தேன் கிடைக்கிறது.
நமது மாவட்டத்தில், தென் மேற்கு பருவ மழை மற்றும் வடகிழக்கு பருவமழை என இரண்டு காலங்களில், மழை அதிகமாக பெய்து வருகிறது. இந்த காலக்கட்டத்தில், மலர்களிலிருந்து தேனீக்கள் தேன்களை சேகரித்துக் கொள்ளும். மேலும், தேன் உற்பத்தி செய்யும் கூடத்திற்கு வங்கியிலிருந்து கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தேன் உற்பத்தி செய்வதற்கு தொழிலாளர்கள் அதிக அளவில் தேவைப்படுவதில்லை. சிறிய தொகை இருந்தாலும், தேன் உற்பத்திக் கூடம் அமைக்க முடியும். சந்தையில் தேனுக்கு அதிக அளவில் வரவேற்பு இருக்கிறது என்றார் அவர்.
தொடர்ந்து, விழா சிறப்பு மலரினை ஆட்சியர் வெளியிட்டார். உலக தேனீ தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப்போட்டிகளில் வெற்றிப்பெற்ற பள்ளி மாணவர், மாணவிகளுக்கு நினைவு பரிசுகளையும்,, சிறந்த தேனீ வளர்ப்பு விவசாயிகளுக்கான விருதுகளை 12 பேருக்ம் ஆட்சியர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) எம்.நிஜாமுதின், துணை இயக்குநர்(தோட்டக்கலைத் துறை) எம்.அசோக்மேக்ரின், உதவி இயக்குநர் ஷீலா ஜான், பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் சொர்ணபிரியா, உதவி இயக்குநர் (கதர் கிராமத் தொழில்கள்) சு.சுரேஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கொட்டூரில்....
குலசேகரம் அருகே கொட்டூரில் தேனீ வளர்ப்போர் மற்றும் அன்னை தெரசா அன்னாசிப் பழ உழவர் உற்பத்தியாளர் சங்கம் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு முன்னோடி தேனீ வளர்ப்பாளரும், அன்னை தெரசா அன்னாசிப்பழ உழவர் உற்பத்தியாளர் சங்கத் தலைவருமான பி. ஹென்றி தலைமை வகித்தார். அயக்கோடு ஊராட்சி முன்னாள் தலைவர் தங்கரமணி கேக் வெட்டினார். இதில் முன்னோடி தேன் உற்பத்தியாளர் ஜூடஸ் குமார் பேசினார்.
ஓய்வு பெற்ற பேராசிரியர் மோகனன், அண்டூர் ரப்பர் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் பிரதீப் குமார், புல்லை ரப்பர் உற்பத்தியாளர் சங்க செயலர் கிருஷ்ணபிள்ளை ஆகியோர் பங்கேற்றனர். அன்னை தெரசா அன்னாசிப்பழ உழவர் உற்பத்தியாளர் சங்க பொருளர் பால்மணி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com