நாகர்கோவில் வரும் ரயில்கள் அனைத்தும் குமரிக்கு வந்து செல்ல வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்ட தலைநகரான நாகர்கோவிலுக்கு வரும் அனைத்து ரயில்களும் கன்னியாகுமரி வந்து செல்ல வேண்டுமென குமரி மாவட்ட சுற்றுலா நலசங்கம் ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட தலைநகரான நாகர்கோவிலுக்கு வரும் அனைத்து ரயில்களும் கன்னியாகுமரி வந்து செல்ல வேண்டுமென குமரி மாவட்ட சுற்றுலா நலசங்கம் ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சங்கத் தலைவர் தலைவர் சி.ராஜேஷ், செயலர் ஜான் கென்னடி, பொருளாளர் ஜெகன் ஆகியோர் அனுப்பியுள்ள மனு: சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் அதிகமானோர் ரயில் மூலம் வருகின்றனர். எனவே, பயணிகள் நலன் கருதி ரயில் நிலையம் முழுவதும் சி.சி.டிவி கேமரா பொருத்த வேண்டும். அதேபோல் கன்னியாகுமரி ரயில் நிலையம் முக்கிய சாலையின் உள்பகுதியில் அமைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளுக்கு ரயில் நிலையம் இருப்பது தெரியவில்லை. எனவே முக்கிய சாலையின் நுழைவு வாயிலில் பெயர் பலகை அமைக்க வேண்டும். கன்னியாகுமரிக்கு நள்ளிரவு நேரத்திலும் ரயில்கள் வந்து செல்வதால் பயணிகள் நலன் கருதி முக்கிய சாலை சந்திப்பில் இருந்து ரயில் நிலையம் வரை மின்விளக்கு வசதி செய்யப்பட வேண்டும். கன்னியாகுமரியில் ஓடும் வாடகை ஆட்டோ மற்றும் கார்களுக்கு மீட்டர் பொருத்தி வாடகைக் கட்டணம் நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத் தலைநகரான நாகர்கோவிலுக்கு வரும் அனைத்து ரயில்களும் கன்னியாகுமரி வந்து செல்ல வேண்டும். அதேபோல் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் அனைத்து ரயில்களும் கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com