பள்ளிக் கட்டடங்களில் சாய்ந்து கிடக்கும் மரங்களை விரைந்து அகற்ற வலியுறுத்தல்

ஓக்கி புயலால் பள்ளிக் கட்டடங்கள் மற்றும் பள்ளி வளாகங்களில் சாய்ந்து கிடக்கும் மரங்களை உடனடியாக அகற்ற வேண்டுமென மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஓக்கி புயலால் பள்ளிக் கட்டடங்கள் மற்றும் பள்ளி வளாகங்களில் சாய்ந்து கிடக்கும் மரங்களை உடனடியாக அகற்ற வேண்டுமென மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புயலால்,  இம்மாவட்டத்தில் பெரும்பாலான பள்ளிக் கட்டடங்கள் மற்றும் பள்ளி வளாகங்களில் மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. ஏராளமான வகுப்பறை கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. பள்ளிகளின் சுற்றுச் சுவர்களும் சேதமடைந்துள்ளன. புயலின் பாதிப்பு ஏற்பட்டு 8 நாள்களை கடந்த பின்பும் சாய்ந்து கிடக்கும் மரங்கள் வெட்டி அகற்றப்படவில்லை. 
இதற்கிடையே வியாழக்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பிளஸ்- 1 வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வுகளும் தொடங்கியுள்ளன. மரங்கள் முழுமையாக அகற்றப்படாத நிலையில் பள்ளிக்கு மாணவர்கள் வரத் தொடங்கியுள்ளதால் அவர்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. 
ஏற்கெனவே, பேச்சிப்பாறை அரசு பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உலர்ந்து நின்ற மரங்களை வெட்டி அகற்றும் வகையில் உலர்ந்த மரங்கள் மற்றும் கட்டடங்களில் அருகே ஆபத்தான நிலையில் நின்ற மரங்கள் ஏலம் விடப்பட்டன.
இருப்பினும் அந்த மரங்கள் வெட்டி அகற்றப்படாலே இருந்தது. இந்நிலையில் ஏலம் விடப்பட்ட 2 மரங்கள் உள்பட சில மரங்கள் பள்ளி வளாகத்திலும் கட்டடங்களின் மீதும் விழுந்துள்ளன. 
இந்நிலையில் விழுந்து கிடக்கும் மரங்களை வெட்டி அகற்றாததால் மாணவர்களும், பெற்றோரும் அதிருப்தியடைந்துள்ளனர். இந்த மரங்களை உடனே வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com