புயல் பாதிப்பு: நிவாரணப் பணிகளை மேற்கொள்ள 56 பொக்லைன் இயந்திரங்கள்: கண்காணிப்பு அலுவலர்கள் தகவல்

குமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் ஏற்பட்ட கடும் பாதிப்பையடுத்து,  நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துவதற்காக 56 பொக்லைன் இயந்திரங்கள்,

குமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் ஏற்பட்ட கடும் பாதிப்பையடுத்து,  நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துவதற்காக 56 பொக்லைன் இயந்திரங்கள்,  58 கிரேன்,  65 மரம் வெட்டும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கண்காணிப்பு அலுவலர்கள் தெரிவித்தனர்.
ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணிகள் குறித்து, கண்காணிப்பு அலுவலரும், தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலருமான டி. கே. ராமச்சந்திரன்,  கூடுதல் கண்காணிப்பு அலுவலர் ராஜேந்திரகுமார் ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் வியாழக்கிழமை  நடைபெற்றது.
வேளாண்மைத் துறை அரசு முதன்மைச் செயலர் ககன்தீப்சிங் பேடி, வருவாய்த் துறை செயலர் டாக்டர் பி.சந்திரமோகன்,  மாவட்ட கூடுதல் கண்காணிப்பு அலுவலர் ஜோதிநிர்மலாசாமி,  நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ்,  ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை இயக்குநர் கா.பாஸ்கரன்,  மீன்வளத் துறை உதவி இயக்குநர் சமீரான் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர்கள் தெரிவித்தது: ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்கம்பங்கள்,  புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மின் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. 
வியாழக்கிழமையிலிருந்து அகஸ்தீசுவரம்,  தோவாளை பகுதிகளுக்கும்,  வெள்ளிக்கிழமையிலிருந்து விளவங்கோடு பகுதிக்கும்,  சனிக்கிழமையிலிருந்து கல்குளம் பகுதிக்கும் மின்விநியோகம் நடைபெறும்.
மின்விநியோகம் இல்லாத பகுதிகளில் ஜெனரேட்டரை பயன்படுத்தி குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. மின் விநியோகப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துவதற்காக 56 பொக்லைன் இயந்திரங்கள்,  58 கிரேன்,  65 மரம் வெட்டும் இயந்திரங்கள் வழங்கப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. குடிநீர் சீரான முறையில் வழங்குவதற்கும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com