சிற்றாறு அணையிலிருந்து தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றம்: பெருஞ்சாணி அணை மறுகால் மூடல்

ற்றாறு அணையிலிருந்து மூன்றாவது நாளாக திங்கள்கிழமை உபரி நீர் வெளியேற்றப்பட்டதையடுத்து திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

சிற்றாறு அணையிலிருந்து மூன்றாவது நாளாக திங்கள்கிழமை உபரி நீர் வெளியேற்றப்பட்டதையடுத்து திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 
 குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அனைத்து அணைகளும் உச்சபட்ச வெள்ள அபாய அளவு நீர்மட்டத்துடன் உள்ளன.
 இதில் பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சனிக்கிழமை இரண்டாவது முறையாக பெருஞ்சாணி அணையின் உபரிநீர் மறுகால் மதகுகள் திறக்கப்பட்ட நிலையில் மழை சற்று தணிந்ததால் திங்கள்கிழமை மாலையில் மதகுகள் மூடப்பட்டன. 
அதே வேளையில் அணையிலிருந்து அனந்தனாறு கால்வாயில் விநாடிக்கு 150 கன அடி தண்ணீர் பாசனத்திற்கு திறக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 75 அடியாக இருந்தது. 
 சிற்றாறு அணையிலிருந்து மூன்றாவது நாளாக திங்கள்கிழமை உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதையடுத்து திற்பரப்பு அருவியில் வெள்ளம் அதிகமாகக் கொட்டுகிறது. திங்கள்கிழமை இந்த அருவியில் சுற்றுலாப்ப யணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.  சிற்றாறு 1 அணையின் நீர்மட்டம்  15.94 அடியாகவும், சிற்றாறு 2 அணையின் நீர்மட்டம் 16.05 அடியாகவும் இருந்தது.  பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 44 அடியாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com