எல்லைத் தமிழர்களின் துயரமறிந்து அரசு செயல்பட வேண்டும்: பூத்துறை பங்குத்தந்தை ஆன்ட்ரூஸ் ஜோரிஸ்

எல்லைத் தமிழர்களின் துயரத்தை அறிந்து  அரசு செயலாற்ற வேண்டும் என்றார்  பூத்துறை பங்குதந்தை ஆன்ட்ரூஸ் ஜோரிஸ்.

எல்லைத் தமிழர்களின் துயரத்தை அறிந்து  அரசு செயலாற்ற வேண்டும் என்றார்  பூத்துறை பங்குதந்தை ஆன்ட்ரூஸ் ஜோரிஸ்.
குமரி மாவட்டம், தூத்தூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல்வர் - மீனவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியது:
குமரி மாவட்டத்தில்  நீரோடி முதல் இரையுமன்துறை வரை 8 மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பதில் வல்லவர்கள். 40 ஆயிரம் மீனவர்களை கொண்ட இந்தப் பகுதியில் 18 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மீனவர்கள் புயலில் கடந்த 30  ஆம் தேதி சிக்கினர்.
அதில் கட்டுமரத்தில் சென்றவர்களுக்கு புயல் குறித்த அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் ஆழ்கடலில் இருந்த மீனவர்களுக்கு தகவல் கிடைக்கவில்லை. இந்த புயலால் தூத்தூரில் 512   பேர் காணாமல் போனார்கள். அதில் 428 பேர் இதுவரை கிடைக்கவில்லை.  84 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். எங்கள் மீனவர்கள் குறித்து எந்தத் தகவலும் கிடைக்காமல் இருப்பதால் வருத்தம் அடைகிறார்கள். 
ஆழ்கடலில் 400 முதல் 500 நாட்டிக்கல் தொலைவில் மீன் பிடிப்பவர்கள் எங்கள் மீனவர்கள். இந்திய விமானப் படையைச் சேர்ந்த விமானம்  மற்றும் கப்பலை பயன்படுத்தினால்தான்  மீனவர்களை கண்டுபிடிக்க முடியும். முதல்கட்டத்தில் 40 நாட்டிக்கல் சென்றபோது இறந்தவர்கள் கிடைத்துவிட்டார்கள். சரியான தேடல் நடவடிக்கை வேண்டும். 428 பேர் சின்ன சின்ன தீவுகளில் ஒதுங்கியிருப்பார்கள்  அவர்களை தேடி கண்டுபிடிக்க வேண்டும்.
 நீங்கள் இப்போது இருப்பது தமிழகத்தின் கடைகோடி பகுதி. தொலைந்துபோன மீனவர்களை நீங்கள் கண்டுபிடித்து தரமுடியும். கணவர், பிள்ளைகள் இறந்துவிட்டதை ஏற்கமுடியாமல் பெண்கள் தவிக்கிறார்கள். கடலில் சின்ன மரக்கிளை கிடைத்தாலே எங்கள் மீனவர்கள் கரையேறிவிடுவார்கள். 
 எங்கள் படகுகளில் 5 முதல் 10   பேர் வரை செல்வார்கள். கேரள மாநிலத்தைவிட அதிகம் நிவாரணம் தருவதாக மீன்வளத்துறை அமைச்சர் தெரிவித்தார். அந்த நம்பிக்கையை நான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன். 
நாங்கள் உங்கள் பிள்ளைகள், நீங்கள் எங்கள் தகப்பன். எங்கள் துயரத்தை அறிந்த நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் மீனவர்கள் கடலில் சென்றால் பிணங்கள் மிதப்பதாக சொல்கிறார்கள். இதனால் கடலுக்கு செல்லவே பயப்படுகிறார்கள். இந்த எல்லைத்தமிழர்களின் ஆழ்ந்த துயரத்தை அறிந்து செயல்பட வேண்டும்  என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com