வள்ளவிளையில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி: கேரள அணி சாம்பியன்

கொல்லங்கோடு அருகேயுள்ள வள்ளவிளையில், சனிக்கிழமை இரவு நடைபெற்ற மாநில அளவிலான மின்னொளி ஐவர் கால்பந்து போட்டியில்,  கேரள மாநில அணி சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது.

கொல்லங்கோடு அருகேயுள்ள வள்ளவிளையில், சனிக்கிழமை இரவு நடைபெற்ற மாநில அளவிலான மின்னொளி ஐவர் கால்பந்து போட்டியில்,  கேரள மாநில அணி சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது.
வள்ளவிளை செயின்ட் ஆன்றணி  ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடைபெற்ற இப்போட்டியில், இரவிபுத்தன்துறை செயின்ட் கத்ரீன்,  நீரோடி செயின்ட் நிக்கோலஸ்,  பூத்துறை எஸ்.ஜே.பி.,  வள்ளவிளை சில்வர்,  நீரோடி அசிசி,  சின்னத்துறை செயின்ட் ஜூட்ஸ்,  கேரள மாநிலம் பருத்தியூர் உதயா, பொழியூர் கொல்லங்கோடு எஸ்.எம்.ஆர்.சி. உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்றன.
இதில், சின்னத்துறை செயின்ட் ஜூட்ஸ் கால்பந்து அணியும்,  கேரள மாநிலத்தைச் சேர்ந்த பருத்தியூர் உதயா அணியும் இறுதிப் போட்டியில் பங்கேற்றன.
இரு அணிகளும் சம அளவிலான கோல்கள் எடுத்திருந்த நிலையில், டாஸ் மூலம் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்டது. இதில்,  உதயா அணி வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது.
இந்த அணிக்கு சுழற்கோப்பையுடன் ரூ. 25 ஆயிரமும்,  2ஆவது இடம்பிடித்த சின்னத்துறை செயின்ட் ஜூட்ஸ் அணிக்கு பரிசுக் கோப்பையுடன் ரூ. 15 ஆயிரமும் வழங்கப்பட்டது.
பரிசுகளை வள்ளவிளை பங்குத்தந்தை டார்வின், கொல்லங்கோடு காவல் ஆய்வாளர் முருகன் ஆகியோர் வழங்கினர்.
ஏற்பாடுகளை வள்ளவிளை செயின்ட் ஆன்றணி ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் பிஜு அல்போன்ஸ், செயலர் ஷிபு,  மன்ற நிர்வாகி திலீப்ஜோஸ் மற்றும் ஜெரோம் ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com